Share….
Month: ஏப்ரல் 2023
அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆவணியாபுரம் – சிம்மராசிக்காரர்களுக்குரிய தலம்
அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆவணியாபுரம் அருள்மிகு அவணீஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஆவணியாபுரம், திருவண்ணாமலை அத்திரி முனிவர் – அனுசூயா தம்பதிகளின் புத்திரர் ஏரண்டர். அவர் காகபுஜண்டரின் சீடர். #ஈசனை தேடி குழு பதிவு# இம்முனிவர் சிவனை வேண்டி தவம் செய்வதற்கு தகுந்த இடம் தேடி அலைந்தார். ஓரிடத்தில் சிம்மம் ஒன்று அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன் ஒரு மலையையும், அதையொட்டிய வனப்பகுதியையும் கண்டார். அதுவே சரியான இடம் என்றுணர்ந்த முனிவர் அங்கேயே கடுந்தவம் புரிந்தார். முனிவரின் […]
கி.பி. 9ம் நுாற்றாண்டின் கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த 1,000 ஆண்டுக்கால பழைமையான சோழர் சிற்பம் ஒன்று, வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம், திம்மாம்பேட்டை எனும் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் பிரபு, ஆய்வு மாணவர்கள் சரவணன், கௌரிசங்கர் ஆகியோர் அடங்கிய குழு, திம்மாம்பேட்டை கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது, அங்கிருந்த காளியம்மன் கோயிலில் பழங்கால கொற்றவை சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பழங்காலத்தில், தமிழர்களின் வழிபாட்டுமுறை இயற்கையை அடிப்படையாகக்கொண்டது. அதன்பிறகு, பஞ்ச பூதங்கள் மற்றும் மரங்கள் ஆகியவை வழிபடு பொருள்களாகப் பாவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, […]
பாதுகாப்பு மையங்களில் போலி சிலைகள்: முன்னாள் ஐ.ஜி., திடுக் தகவல்
புதுக்கோட்டை: ”ஹிந்து சமய அறநிலையத்துறை சிலை பாதுகாப்பு மையங்களில் உள்ள பெரும்பாலான சிலைகள் போலியானவை,” என, சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் பிரிவின் முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தெரிவித்தார். புதுக்கோட்டையில், உலக சிவனடியார்கள் அறக்கட்டளை சார்பில், சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு, நேற்று நடைபெற்றது. இதில், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் மீது […]
120 வருடங்களுக்கு ஒருமுறை சித்தர்கள் பூசை செய்யும் அக்னீஸ்வரர், அரசண்ணாமலை!
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். சென்ற பதிவில் திருநின்றவூர் பாக்கம் ஊரில் அருள்பாலித்து வரும் படிஅருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம். இதற்கு முந்தைய பதிவில் அரசண்ணாமலையார் கோயிலில் 120 […]
பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
திருவள்ளூர் மாவட்டம் அணைக்கட்டு சேரி கிராமத்தில் அழகூர அமைந்துள்ளது. பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக கருதப்படுகிறது. கோயிலில் உற்சவர் ஆகவும் மூலவராகவும் அகத்தீஸ்வரர் காட்சி தருகிறார். அம்பாலாக ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தாயார் அருள்பாலித்து வருகிறார். கோயில் பிரகாரங்களில் உள்ள தூண்களில் பல இடங்களில் மீன் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் நுணுக்கமான வேலைப்பாடுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வந்து வழிபடுபவருக்கு வேண்டிய காரியங்கள் அனைத்தும் […]
சித்தர்கள் போற்றும் அத்ரிமலை திருக்கோயில்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிபாரத்தில் அமைந்துள்ளது அத்திரி தபோவனம். இத்தலத்திற்கு சென்று வந்தால் கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகின்றது. வடக்கே உள்ள கேதார்நாத் திருத்தலம் போன்று தெற்கே மகிமை பெற்று திகழ்கின்றது அத்ரிநாத் எனப்படும் அத்ரிமலை கோயில். அகத்தியர் பொதிகை மலைக்கு வருவதற்கு முன்பே இந்த பகுதியில் அத்ரி மகரிஷி வாழ்ந்ததாக கூறப்படுகின்றது. இந்த மலைக்கு வந்து வழிபட்டால் அத்ரி, அகத்தியர், கோரக்கர் போன்ற தவசீலர்களின் […]
விஜயவாடா கனக துர்கா கோயில், ஆந்திரப் பிரதேசம்
முகவரி : விஜயவாடா கனக துர்கா கோயில், ஆந்திரப் பிரதேசம் அர்ஜுனா தெரு மல்லிகார்ஜுனபேட்டா இந்திரகீலாத்ரி, விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம் 520001 இறைவி: கனக துர்கா அறிமுகம்: கனக துர்கா கோயில் கனக துர்கா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் உள்ள தெய்வம் கனக துர்கா என்றும் பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. இக்கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ளது. காளிகா புராணம், துர்கா சப்தசதி மற்றும் பிற வேத இலக்கியங்கள் […]
புச்சிரெட்டிபாலம் கோதண்டராமர் கோயில், நெல்லூர்
முகவரி : புச்சிரெட்டிபாலம் கோதண்டராமர் கோயில், நெல்லூர் புச்சிரெட்டிபாலம், இசகாபாலம், ஆந்திரப் பிரதேசம் 524305 இறைவன்: கோதண்டராமர் அறிமுகம்: ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், SPSR நெல்லூர் மாவட்டம், புச்சிரெட்டிபாலத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சுமார் 1715-16 ஆம் ஆண்டு புச்சிரெட்டிபாலத்தை நிறுவிய குடும்பத்தின் உறுப்பினரான ‘பங்காரு ராமி ரெட்டி’ என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ டோட்லா ராமி ரெட்டி என்பவரால் 1765 ஆம் ஆண்டில் கோயில் கட்டத் தொடங்கியது. 1784 ஆம் ஆண்டு […]
நாரபுர வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஆந்திரப் பிரதேசம்
முகவரி : நாரபுர வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஜம்மலமடுகு, கடப்பா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் – 516434 இறைவன்: வெங்கடேஸ்வர சுவாமி அறிமுகம்: நரபுரா வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், ஜம்மலமடுகு, கடப்பா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பென்னா நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆற்றின் மறுகரையில் ஜம்மலமடுகு நகரம் அமைந்துள்ளது. இது ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமான வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான வைணவ கோவில். புராண முக்கியத்துவம் : நாரபுரையா என்ற நபர் கனவில் ஸ்ரீ வெங்கடேஸ்வர […]