முகவரி : மாதவரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயில், வேணுகோபால் நகர், மாதவரம், சென்னை, தமிழ்நாடு – 600060 இறைவன்: கைலாசநாதர் இறைவி: ஸ்ரீ கற்பகாம்பாள் அறிமுகம்: சென்னை மாதவரம் பெருமாள் கோயில் தெருவில் கைலாசநாதர் கோயில் உள்ளது. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கைலாசநாதர் கோயில் மாதவரத்தில் உள்ள பழமையான கோயிலாகும், இது தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கைலாசநாதரின் கருவறை பிரதான பிராகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. தேவி கற்பகாம்பாள் இங்கு […]
Day: அக்டோபர் 29, 2022
சந்தவெளிப் பேட்டை உருப்பிடி அம்மன் திருக்கோயில், கடலூர்
முகவரி : சந்தவெளிப் பேட்டை உருப்பிடி அம்மன் திருக்கோயில், சந்தவெளிப் பேட்டை, குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607303. இறைவி: உருப்பிடி அம்மன் அறிமுகம்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் இருந்து வடக்கே 6 கி.மீ. தூரத்தில் சந்தவெளிப் பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தின் தெற்குப்பகுதியில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையான உருப்பிடி அம்மன் கோயில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் : சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட வீரமுண்டனார், சோழப் […]
மேல்பந்திக்குப்பம் கயிலாசநாதர் சிவன்கோயில், வேலூர்
முகவரி : மேல்பந்திக்குப்பம் கயிலாசநாதர் சிவன்கோயில், மேல்பந்திக்குப்பம், சோளிங்கர், வேலூர் மாவட்டம் – 631102. இறைவன்: கயிலாசநாதர் இறைவி: ஸ்ரீகாமாட்சி அறிமுகம்: சோழர்கள் ஆட்சியில் சோழ சிம்மபுரம் என்றும், விஜயநகரப் பேரரசு காலத்தில் சோழலிங்கபுரமாகவும் அழைக்கப்பட்ட தலம், இன்றைய சோளிங்கர். புராதனப் பெருமைகளும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்த சோளிங்கர் நகரிலிருந்து சுமார் 5 கி.மீ.தொலைவில், மேல்பந்திக்குப்பம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம். புராண காலத்தில் அஷ்ட திக் பாலகர்களால் உருவானது […]
குழுமணி ஊரடச்சி அம்மன் திருக்கோயில், திருச்சி
முகவரி : குழுமணி ஊரடச்சி அம்மன் திருக்கோயில், குழுமணி, திருச்சி மாவட்டம் – 639103. இறைவி: ஊரடச்சி அம்மன் அறிமுகம்: திருச்சியை அடுத்த குழுமணி கிராமத்தில் காவல் தெய்வமாக நின்று அருள்பாலிக்கிறாள் ஊரடச்சி அம்மன். இந்த ஊரின் வடமேற்கில் அமைந்துள்ளது ஊரடச்சியம்மன் கோயில். ஊரடச்சி அம்மன் கோயில் திருச்சி நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருக்கிறது. குழுமணி ஊர் பஸ் நிறுத்தத்திலிருந்து ½ கி.மீ சென்றால் ஊரடச்சி அம்மன் கோயிலை அடையலாம். புராண முக்கியத்துவம் : […]