Sunday Nov 24, 2024

வீரப்பெருமாநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவாலயம், கடலூர்

முகவரி வீரப்பெருமாநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவாலயம், வீரப்பெருமாநல்லூர், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607 101. இறைவன் இறைவன்: வியாக்ரபுரீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் கடலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை கிராமமான இந்த வீரபெருமாநல்லூர் பண்ருட்டியின் மேற்கில் 14கிமி தொலைவில் உள்ளது. பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னன் வீரபெருமான் பெயரால் உருவாக்கப்பட்ட ஊராகும். இவ்வூரில் சிவாலயம் ஒன்றும் வைணவ ஆலயம் ஒன்றும் உள்ளது. ஒருகால பூஜையில் நாட்கள் நகர்கின்றது. வயதான முதியவர் ஒருவரே பூசகராக உள்ளார். […]

Share....

வடக்கு மாங்குடி அருணாசலேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி வடக்கு மாங்குடி அருணாசலேஸ்வரர் சிவன்கோயில், வடக்கு மாங்குடி, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614210 இறைவன் இறைவன்: அருணாசலேஸ்வரர் இறைவி: அபிதகுஜாம்பாள் அறிமுகம் கும்பகோணம்- தஞ்சை சாலையில் உள்ள்ளது அய்யம்பேட்டை , இந்த அய்யம்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து தெற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது வடக்குமாங்குடி. மான்குடி மருவி மாங்குடி ஆனது. இவ்வூர் மாங்குடி, அகரமாங்குடி என இரு பாதியாக இதன் தெற்கில் உள்ளது. வெள்ளாளர் தெருவின் மேற்கு கோடியில் சிவன்கோயிலும், தெரு […]

Share....

ஒளிமதி வஜ்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி ஒளிமதி வஜ்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், ஒளிமதி, நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614 404. இறைவன் ஒளிமதி வஜ்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், ஒளிமதி, நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614 404. அறிமுகம் திருவாரூர் மாவட்டத்தில் . நீடாமங்கலத்தில் இருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஒளிமதி. சந்திரனின் சாபம் போக்கிய ஈசன், வஜ்ரபுரீஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறார். அம்பாளின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. கோயில் சிறிய கோயில் தான், பல்லாண்டு […]

Share....

ஆனாங்கூர் அகத்தீஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை

முகவரி ஆனாங்கூர் அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆனாங்கூர், குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 801. இறைவன் இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: சௌந்தர்யநாயகி அறிமுகம் கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் உள்ள திருவாலங்காட்டில் இறங்கி, அங்கிருந்து தேரழுந்தூர் செல்லும் சாலையில் ஆனாங்கூர் என இறங்க வேண்டும். (கோ.சி.மணி வீடு நிறுத்தம்). இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அம்பிகை பசுவாகவும், திருமால் மேய்ப்பனாகவும் பூமிக்கு சாபம் பெற்றுவந்த கதையில் இந்த ஆனாங்கூர் ஒரு […]

Share....

எடகுடா சிவன் கோயில், கேரளா

முகவரி எடகுடா சிவன் கோயில், மலப்புரம் மாவட்டம், கேரளா 676510, இந்தியா இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் எடக்குடா சிவன் கோயில் இந்தியாவின் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மலப்புரம் நகரத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இவை பல்வேறு பகுதிகளிலிருந்து பயணிக்கும் மக்களுக்கு காத்திருப்பு மற்றும் ஓய்வு இடங்களாக பயன்படுத்தப்பட்டன. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. கோயிலைச் சுற்றியுள்ள மரங்களும் புதர்களும் வளர்ந்து பார்ப்பதர்க்கு காட்டைப்போல் உருவாக்கியுள்ளன. கோயில் முற்றிலும் […]

Share....

வலஞ்சரி சிவன் கோயில், கேரளா

முகவரி வலஞ்சரி சிவன் கோயில் வலஞ்சேரி, மலப்புரம் மாவட்டம், கேரளா 676552 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இந்தியாவில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலஞ்சேரி கிராமப்புற கிராமத்தில் பெரிய சிவலிங்கத்துடன் கூடிய சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த சிறிய இடிபாடுகளுடன் காணப்படும் இக்கோயில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. லிங்கம் வடிவத்தில் இறைவன் சிவன் உள்ளார். கேரளாவில் கிராமப்புறத்தில் பாழடைந்த நிலையில் உள்ளது. இங்கே வேறு எந்த தெய்வங்களும் இல்லை. பூஜைகள் எதுவும் இங்கு நடைப்பெறவில்லை. இந்த கோயில் […]

Share....

விழிஞ்சம் குடைவரை குகைக்கோயில், கேரளா

முகவரி விழிஞ்சம் குடைவரை குகைக்கோயில் விழிஞ்சம் காவல் நிலையம், கோவலம், விழிஞ்சம், கேரளா 695521 இறைவன் இறைவன்: பசுபததானமூர்த்தி அறிமுகம் கி.பி 8 ஆம் நூற்றாண்டினை சேர்ந்த இக்கோவில் இந்தியாவின் தெற்கு கேரளாவில் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள விழிஞ்சத்தில் உள்ள குகைக் கோயிலாகும். கருங்கல் குடைவரை கோவில் வினாதர தட்சிணாமூர்த்தியின் சிற்பத்துடன் சன்னதியை கொண்டுள்ளது. குகையின் வெளிப்புறச் சுவர் சிவனின் முடிக்கப்படாத செதுக்கல் உள்ளன. இடதுபுறத்தில் “திரிபுரந்தகரம்” என்றும் வலதுபுறத்தில் பார்வதியுடன் “நடராஜார்” என்றும் (முடிக்கப்படாத பல்லவ துவரபாலகர்கள்) […]

Share....

ஸ்ரீ நாராயணபுரம் மகாவிஷ்ணு கோயில், கேரளா

முகவரி ஸ்ரீ நாராயணபுரம் மகாவிஷ்ணு கோயில் வடச்சேரிகோணம்-மனம்பூர் சாலை, ஒட்டூர், கேரளா 695143 இறைவன் இறைவன்: மகாவிஷ்ணு அறிமுகம் ஸ்ரீநாராயணபுரம் மகாவிஷ்ணு கோயில் இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு பழங்கால விஷ்ணு கோயில். கல்லம்பலம்-வர்கலா சாலையில் உள்ள வடச்சேரிகோணம் சந்திப்பிலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் உள்ளது. ஸ்ரீ நாராயணபுரம் என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. இது ஆரம்பகால விஜயநகர பாணி கட்டிடக்கலை உள்ளூர் வடிவங்கள் மற்றும் அம்சங்களுடன் இணைந்த […]

Share....
Back to Top