Thursday Jan 23, 2025

திருவதிகை அதிகை வீரட்டானேசுவரர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை-607 106, பண்ருட்டி போஸ்ட, கடலூர் மாவட்டம். போன்: +91-98419 62089 இறைவன் இறைவன்: வீரட்டானம், வீரட்டேஸ்வரர் இறைவி: திரிபுரா சுந்தரி அறிமுகம் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் […]

Share....

திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை-606 111 திருவரத்துறை, கடலூர் மாவட்டம். போன் +91-4143-246 467 இறைவன் இறைவன்: தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி, ஆனந்த நாயகி அறிமுகம் திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயமாகும். இக் கோவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல்பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இவ்வூர் திருநெல்வாயில் அரத்துறை என்றும், திருவரத்துறை என்றும், […]

Share....

திருமாணிகுழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி – 607 401. கடலூர் மாவட்டம். போன்: +91-4142-224 328 இறைவன் இறைவன்: வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர், இறைவி: அம்புஜாட்சி, மாணிக்கவல்லி அறிமுகம் திருமாணிகுழி – திருமாணி வாமனபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தளங்களில் 17வது தளங்களில் ஒன்றாகும். இக்கோயில் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து திருவந்திபுரம் வழியாக பாலூர், பண்ருட்டி செல்லும் சாலையில் திருவந்திரபுரத்திற்கு […]

Share....

திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு பாடலீசுவரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர்-607 002, கடலூர் மாவட்டம். போன் +91-4142- 236 728, 98949 27573, 94428 32181 இறைவன் இறைவன்: பாடலேஸ்வரர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தலம் திருப்பாதிரிப்புலியூர் […]

Share....

மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர்- 608 304. கடலூர் மாவட்டம். போன்: +91- 4142 262646, 264 638, 93456 56982 இறைவன் இறைவன்: அமிர்தகடேஸ்வரர் இறைவி: வித்யூஜோதிநாயகி அறிமுகம் திருக்கடம்பூர் – மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட அமுதகலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு […]

Share....

திருநாரையூர் சௌந்தரேஸ்வரர் கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் கோயில், திருநாரையூர்-608 303, காட்டு மன்னார்கோவில் வட்டம், கடலூர் மாவட்டம். போன்: +91- 94425 71039, 94439 06219 இறைவன் இறைவன்: சௌந்தரேஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் திருநாரையூர் சௌந்தரநாத கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.இத்தலம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்தில் உள்ள திருநாரையூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 33வது தலம் ஆகும். இத்தல இறைவன் சுயம்புவாகத் […]

Share....

திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில், திருத்துறையூர், பண்ருட்டி தாலுகா, கடலூர் – 607 205. போன் +91- 4142 – 248 498, 94448 07393. இறைவன் இறைவன்: சிஷ்டகுருநாதேஸ்வரர், பசுபதீஸ்வரர் இறைவி: சிவலோக நாயகி அறிமுகம் திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில் சுந்தரரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தில் மூலவர் சிஷ்டகுருநாதேஸ்வரர் என்றும் பசுபதீஸ்வரர் என்றும் வழங்கப்பெறுகிறார், தாயாரின் பெயர் சிவலோகநாயகி என்றும் பூங்கோதை என்றும் வழங்கப்பெறுகிறது. இத்தலத்தில் சூர்யபுஷ்கரிணி எனும் தீர்த்தமும், கொன்றை மரம் […]

Share....

திருச்சோபுரம் தியாகவல்லி மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு மங்களபுரீஸ்வரர் (சோபுரநாதர்) திருக்கோயில், திருச்சோபுரம் – 608 801 தியாகவல்லி, கடலூர் மாவட்டம். போன்: +91-94425 85845 இறைவன் இறைவன்: மங்களபுரீஸ்வரர், சோபுரநாதர் இறைவி: தியாகவல்லி, வேல்நெடுங்கண்ணி அறிமுகம் திருச்சோபுரம் தியாகவல்லி மங்களபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்கள் ஒன்றாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் வழிபட்ட தலம் எனப்படுகிறது. புராண […]

Share....

திருக்கூடலையாற்றூர் நர்த்தனவல்லபேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர் – 608 702 கடலூர் மாவட்டம். போன் +91- 4144-208 704. இறைவன் இறைவன்: நர்த்தனவல்லபேஸ்வரர் இறைவி: ஞானசக்தி, பராசக்தி அறிமுகம் திருக்கூடலையாற்றூர் நர்த்தனவல்லபேசுவரர் – நெறிக்காட்டுநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். சுந்தரரால் தேவாரம் பாடப்பெற்ற இச் சிவாலயம் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு இறைவன் அந்தணர் வடிவில் வழிகாட்டியதும், பிரமனுக்கு இறைவன் நர்த்தனம் […]

Share....

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை-608 002, சிவபுரி போஸ்ட், அண்ணாமலை நகர், சிதம்பரம் தாலுகா, கடலூர் மாவட்டம். போன்: +91- 98426 24580. இறைவன் இறைவன்: பால்வண்ணநாதர் இறைவி: வேதநாயகி அறிமுகம் திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தல் உள்ள சிவத்தலமாகும். [1] இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 4வது தலம் ஆகும். புராண முக்கியத்துவம் கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ […]

Share....
Back to Top