ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி கோயில், கேரளா
முகவரி
ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி கோயில், பாரிகாட், முத்தத்தோடி, காசர்க்கோடு மாவட்டம், கேரளா, 671123
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
மகிஷாசுரமர்த்தினி கோயில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். கேரளாவின் காசர்க்கோடு மாவட்டத்தின் பாரிகாட், முத்தத்தோடி மதுவாஹினி ஆற்றின் கரைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த சிவன் கோயில் முற்றிலும் பாழடைந்த நிலையில் உள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில். மேலும் கைவினைஞர்கள் மற்றும் சிற்பங்களின் கைவேலைகள் அனைத்தும் சிதைந்து போயியுள்ளன. இந்த கோயில் போதுமான பராமரிப்பு இல்லாமல் செடிக்கொடிகள் வளாகம் முழுவதும் வளர்ந்துள்ளன. கோயிலுக்கு முன்னால் செங்கல் சிதறிக்கிடக்கின்றன. மரங்கள் முளைப்பதால் சுவர்கள் சேதமடைகின்றன. சிவலிங்கம் கோயிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. பூஜைகள் கூட சில சிறப்பு தினங்களில் நடக்கப்படுகின்றன. இந்த சிவன் கோயில் காடுகளின் மையத்தில் உள்ளது, பெரிய மரத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கான பாதை மிகச் சிறியது, ஆனால் அந்த இடமே அதற்கு தெய்வீக அதிர்வைக் கொண்டுள்ளது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாரிகாட்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆலுவா
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்