ஸ்ரீ சக்லேஷ்வர் தரிசனம்!
மானச கங்கா,
பஞ்சலிங்கத் தொகுதியான ஸ்ரீ சக்லேஸ்வர் மகாதேவ்
மதுராவுக்கு மேற்கே 26 கிலோமீட்டரில் கோவர்த்தனகிரி உள்ளது.அதன் அடிவாரத்தில் மானச கங்கை என்னும் பொய்கை உள்ளது.
மானச கங்கையின் வடக்குக் கரையில், சக்கரத் தீர்த்தக் கரையில், ஐந்து சிவலிங்கங்களின் குழு ஸ்ரீ சக்லேஸ்வர மகாதேவ் என்ற பெயரில் பிரசித்தி பெற்று விளங்குகின்றது.
இந்த ஐந்து சிவலிங்கங்களும் சிவப்பரம்பொருளின். ஐந்து திருமுகங்களாகக் கருதப்படுகின்றன.அவை கோவர்த்தகிரியினைப் பாதுகாக்கின்றன.
( இங்கு,நாம் சிவப்பரம்பொருளின் சதாசிவ மூர்த்தம் பற்றி சிறிது காண்போம்.
சிவப்பேறு அருளும் சிவ வடிவங்களுள் சதாசிவ மூர்த்தமும் ஒன்று.சிவ ஆகமத்தை உபதேசிக்கும் பொருட்டு,பெருமான் ஐந்து முகங்களுடன் சதாசிவராகக் காட்சி அளிக்கிறார்.
சடாமுடியுடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் கைகளைக் கொண்டவர். இவருடைய வலக்கையில் சூலமும், மழுவும், கட்வங்கமும், வாளும், பீஜா பூரகமும், வச்சிரமும், அபயமுத்திரையும் கொண்டு காட்சியளிக்கும். இடக்கையில் நாகம், பாசம், நீலோற்பலம், அங்குசம், டமருகம், வரதம், மணிமாலை, பரிவட்டம் எனக்காணப்படும். இவர் ஸ்படிக நிறத்துடன் காட்சிக்கொடுப்பவர்.
மேலும் தியான பூஜைக்காக சகளத்திருவுருவத்துடன் காட்சியளிப்பவர்.
ஒவ்வொரு திருமுகமும் ஒவ்வொருவருக்கு உரியது எனவும் சொல்லப் படுகின்றது. கிழக்குப் பார்த்த திருமுகம் ஈஸ்வரனுக்கு உரியது எனவும், அதைத்
“தத்புருஷம்” என அழைப்பதாயும், மேற்கே பார்க்கும் முகம் பிரம்மனுக்கு உரியது எனவும், “சத்யோ ஜாதம்” என அழைக்கப் படுவதாயும், தெற்கே பார்க்கும் முகம் ருத்ரனுக்கு உரியது எனவும், “அகோர முகம்” என அழைக்கப் படுவதாயும், வடக்கே பார்க்கும் திருமுகம், விஷ்ணுவுக்கு உரியது எனவும், “வாமதேவம்” என அழைக்கப் படுவதாயும், உச்சியில் விளங்கும் சதாசிவனின் முகம் “ஈசானம்” எனவும் அழைக்கப் படுவதாய் அறிகின்றோம்.
ஈசனின் ஐந்தொழில்களையும் குறிக்கும் இவை எனவும் சொல்லப் படுகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளுதல் என்னும் ஐந்தொழில்களயும் ஐந்து முகங்களும் குறிக்கின்றன என்றும் தெரிந்து கொள்கின்றோம்.
இம் முர்த்திகள் ஐவரும் அடங்கியள்ள நிலையை நாம் கன்மசா தாக்கியம் என்போம்.
இத்தகைய பெருமைகளைக் கொண்டவர் சதாசிவ மூர்த்தியாவார். சாந்த சொருபீயான இவரே அனைத்திற்கும் காரணகர்த்தாவாவார்.)
மானச கங்கையின் இந்த பகுதி சக்ரா-தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது,
சிவப்பரம்பொருள் இந்த இடத்தில் நிலைகொண்டிருப்பதால், இந்த சிவலிங்கம் தொகுதி, முதலில் சக்கரேஸ்வரர் என்று அழைக்கப்பட்டது,
ஆனால் இப்போது அவர் சகலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த இடம் சக்ரா-தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது,
ஏனெனில், கிருஷ்ணர் கோவர்தன மலையைத் தூக்கியபோது, கோவர்தனத்தின் மீது பெய்யும் மழையை எல்லாம் வறண்டுபோகும்படியாக,மலையின் மேலே தோன்றும்படி சுதர்ஷன சக்ரத்தை அவர் கேட்டுக்கொண்டார்,
இதனால் அடியில் நிற்கும் விருந்தாவனவாசிகள் மூழ்க மாட்டார்கள்.
இந்திரன் விருந்தாவன வாசிகளை அழிக்க அனுப்பிய ஸாங்வர்த்தக மேகங்களைத் திரும்பப் பெற்றதும், ஆபத்து முடிந்ததும், சுதர்ஷன சக்கரம், கிருஷ்ணரிடம் ஓய்வெடுக்க இடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டது.
கிருஷ்ணர் சுதர்சனருக்கு,மானச கங்கையின் வடக்குக் கரையில் இடமொன்றைக் கொடுத்தார்.இதனால், இந்த இடம் சக்ரத் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ சக்லேஸ்வர மகாதேவரின் தற்போதைய கோயில் சமீபத்தியது; அசல் முஸ்லிம்களால் அழிக்கப்பட்டது. இருப்பினும், இங்குள்ள மூர்த்தங்கள் மிகவும் பழமையானவை, அவை ஸ்ரீகிருஷ்ணரின் கொள்ளுப்பெயரான வஜ்ரனபாவால் நிறுவப்பட்டவை.( ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரனான அனிருத்தனின் மகன்)
சக்கலேஸ்வரா மகாதேவ் மந்திரில் ஐந்து லிங்கங்களும், நந்தியின் அழகிய ஸ்ரீ மூர்த்தியும் அமர்ந்து பிரதான சன்னதிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பிரஜா மண்டலைப் பாதுகாக்கும் முக்கிய மகாதேவர் ( சிவப்பரம்பொருள்) மந்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.
மற்றவை, பிருந்தாவனில் கோபேஸ்வரா, இராதாகுண்டில் குண்டேஸ்வரா, மதுராவில் பூதேஸ்வரா, நந்தா காவ்னில் நந்தேஸ்வரா மற்றும் காமியவனில் காமேஸ்வரா.
இந்த சிவாலயங்களையும் ஸ்ரீகிருஷ்ணரின் கொள்ளுப்பெயரான வஜ்ரனபாவா நிறுவியுள்ளார்.