Sunday Jan 19, 2025

ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில், சிங்கப்பூர்

முகவரி :

ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில்,

25 சுங்கே கடுத் அவென்யூ,

சிங்கப்பூர் – 729679.

இறைவன்:

சிவன்

அறிமுகம்:

 ஸ்ரீ சிவன் கோயில், 1850-களின் தொடக்கத்தில் ஒரு கட்டடமாக மறுநிர்மாணம் செய்யப்பட்டதாகக் குறிப்புகள் பதிவாகியுள்ளன. ஆர்ச்சர்ட் ரோட்டில், தற்போது டோபி காட் பெருவிரைவு போக்குவரத்து இரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில், கோயில் அமையப் பெற்றிருந்தது. 1850-ஆம் ஆண்டிற்கு முன்னரும் கூட, இக்கோயிலில் இருந்த சிவலிங்கம் வழிபட்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் சிவலிங்கம், சிங்கப்பூருக்குள்ளேயே மூன்று முறை இடம் மாறியுள்ளது – பொத்தோங் பாசிர் வட்டாரத்திலிருந்து டோபி காட் வட்டாரத்தின் மறுமுனைக்கு; பின்னர், தற்போது மெக்டோனல்ட்ஸ் ஹவுஸ் அமைந்திருக்கும் பகுதிக்கு; அதன்பின்னர், ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஓர் இடத்திற்கு.   அங்குதான் இக்கோயில், 1983-ஆம் ஆண்டு வரை இருந்து வந்தது.

ஸ்ரீ சிவன் கோயிலை, மொஹமதிய  இந்து அறக்கட்டளை வாரியத்தின் (1907-ஆம் ஆண்டில் நிறுவப்பெற்றது) நிர்வாகத்திற்கு உட்படுத்தும் ஆணை ஒன்று, 18 அக்டோபர் 1915 அன்று அரசிதழில் பதிப்பிக்கப்பட்டது. 1968-ஆம் ஆண்டில், ஸ்ரீ சிவன் கோயில் உள்ளிட்ட நான்கு கோயில்களை நிர்வகிப்பதற்காக, இந்து அறக்கட்டளை வாரியம் தோற்றுவிக்கப்பட்டது.

காலம்

1850 ஆம் ஆண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சுங்கே கடுத்

அருகிலுள்ள இரயில் நிலையம்

டோபி காட்

அருகிலுள்ள விமான நிலையம்

சிங்கப்பூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top