ஸ்ரீவில்லிபுத்தூர் பாதாள பேச்சியம்மன் கோயில், விருதுநகர்
முகவரி :
ஸ்ரீவில்லிபுத்தூர் பாதாள பேச்சியம்மன் கோயில்,
மாசாபுரம் பிரதான சாலை,
ரங்கநாதபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர்,
தமிழ்நாடு – 626125
இறைவி:
பேச்சியம்மன்
அறிமுகம்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அம்மன் கோவில், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் திருமுக்குளத்திற்கு அருகில் உள்ள இந்த புகழ்பெற்ற கோவில் பேச்சியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 500 – 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.
புராண முக்கியத்துவம் :
ஸ்ரீவில்லிப்புத்தூரின் சுற்று வட்டாரங்களில் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருளப்பன், மாயாண்டி, வீரபத்திரன்னு மூணுபேரு கொள்ளையடித்து வருவார்களாம். இந்த கொள்ளையர்களினால் பல நாள் உடமைகளை இழந்த ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் அனுதினமும் வழிபட்டு வரும் பாதாளபேச்சியம்மன் முன்பு கூடி முறையிட்டனர். நீருற்று தோண்டும் போது மண்ணுக்கு அடியில் அம்மன் விக்ரகம் இருந்ததால் பாதாள பேச்சியம்மன் என்று அழைக்கப்பட்டாள். மீண்டும் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றினைந்து வெள்ளிக்கிழமை இரவு பாதாள பேச்சியம்மனுக்கு கிடா வெட்டி பொங்கலிட்டும், சர்க்கரைப் பொங்கல் வைத்தும் படையலிட்டு பூஜை செய்து வழிபட்டனர். அப்போது அம்மன் அருள் வந்து ஆடிய பெண் ஒருவர், இனி, ‘‘உங்களுக்கு கொள்ளையர்கள் பயம் வேண்டாம். நான் இருக்கேன்.’’ என்று உரைத்தாள்.
அன்றைய தினம் நள்ளிரவு நேரம் வழக்கம் போல் கொள்ளையர்கள் மூவரும் தனித்தனி குதிரைகள் மேல் ஊருக்குள் செல்ல வேகமாக வந்து கொண்டிருந்தனர். ஊர் எல்லையிலே நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக உருவம் கொண்டு பாதாள பேச்சியம்மன் படுத்திருந்தாள். கால் நீட்டிருக்கிற பக்கமா குதிரைகளை மெதுவாத் தட்டி விடுங்க’’ என்று கூற, அந்த நேரம், அம்மனோட கால் நீளமாகிக் கிட்டே போச்சு.மூன்று பேரும் திகைத்தப்படி நின்னாங்க, பாதாள பேச்சி, தனது சுயரூபத்தை காட்டி எழுந்து நின்றாள். உடனே அந்த மூன்று பேரும் அம்மன் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினர். இது என் கோட்டை. நான் இருக்கேன். இனி இந்த பக்கம் வரவே கூடாது என்று குரல் கொடுத்தாள் பேச்சி. தலை நிமிர்ந்து பார்த்தனர். மூவரும். அந்நேரம் அம்மன் அவ்விடம் இல்லை. மூவரும் அவ்விடமே கல்லாக நின்றனர். அதன் பின்னர் நிறைமாத கர்ப்பிணி படுத்திருப்பது போல் மண்ணில் உருவம் செய்து பாதாள பேச்சியம்மனை அந்த ஊரார்கள் வணங்கி வந்தனர்.
நம்பிக்கைகள்:
குழந்தை வரம், செழிப்பு மற்றும் அச்சமின்மைக்காக பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். பக்தர்கள் வஸ்திரம் மற்றும் ஆபரணங்களை இறைவனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.
திருவிழாக்கள்:
மகாசிவராத்திரி
காலம்
500-100 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை