ஸ்ரீமுஷ்ணம் பட்டாபி ராமர் கோவில், கடலூர்
முகவரி :
பட்டாபி ராமர் கோவில்,
ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம்,
தமிழ்நாடு – 608703.
இறைவன்:
ராமர்
அறிமுகம்:
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் என்ற இடத்தில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ராமர் கோயில் உள்ளது. புகழ்பெற்ற ஸ்ரீமுஷ்ணம் பூ வராஹ ஸ்வாமி கோயிலுக்கு வெளியே இந்தக் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்த கோவிலில் ஸ்ரீ ராமர் அமர்ந்த கோலத்தில் இருப்பது மிகவும் அரிதான காட்சியாகும்.
ஸ்ரீமுஷ்ணம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 300 மீட்டர், ராஜேந்திர பட்டினத்திலிருந்து 8 கி.மீ., ஆண்டிமடத்தில் இருந்து 9 கி.மீ., சேத்தியாத்தோப்பில் இருந்து 19 கி.மீ., விருத்தாசலத்திலிருந்து 20 கி.மீ., விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து 23 கி.மீ., சிதம்பரத்திலிருந்து 38 கி.மீ., கடலூரில் இருந்து 68 கி.மீ. புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து 93 கி.மீ., சென்னை விமான நிலையத்திலிருந்து 224 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஸ்ரீமுஷ்ணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி