வைரவன் கோவில் காலபைரவர் கோயில், தஞ்சாவூர்
முகவரி :
வைரவன் கோயில் காலபைரவர் கோயில்,
வைரவன் கோயில்,
தஞ்சாவூர் – திருவையாறு சாலை,தஞ்சாவூர்
இறைவன்:
காலபைரவர்
அறிமுகம்:
காரிய வெற்றியை அளிப்பதில் காலபைரவருக்கு இணையான தெய்வம் இல்லை என்பார்கள். எந்த காரியம் தடைபட்டு நிற்கிறதோ, அந்த காரியம் விரைவாக சுபமாக நடைபெற காலபைரவரை வேண்டிக்கொள்ள இனிதே நிகழும் என்பது கண்கூடு! தீயவருக்கு காலனாகவும் நல்லவருக்கு நண்பராகவும் விளங்கும் காலபைரவருக்கு தென்னாட்டில் ஒரு விசேஷமான கோயில் உண்டென்றால் அது வைரவன் கோயில் காலபைரவர் கோயில் தான் எனலாம். இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை
புராண முக்கியத்துவம் :
முருகப்பெருமானிடம் உபதேசம் பெற கயிலையில் இருந்து வந்த சிவபெருமானுடன் அனைத்து தேவர்களும் வந்தனர். இவர்களில் பைரவர் மட்டும் ஈசனின் ஆணைப்படி வைரவன் கோயில் எனும் இடத்தில் காவியியின் வடகரையில் தென்முகமாக அமர்ந்து கொண்டார். அவர் நோக்கிய இடத்தில் ஒரு மயானமும் உள்ளது. இது காசிக்கு நிகரான பெருமை கொண்ட தலம். காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை அம்சங்களையும் ஐவரும் கொண்டிருக்கிறார். இங்கு பைரவரை பிரதிஷ்டை செய்த ஈசன் தங்கிய இடம் ஈசன் குடியாகி, அதுவே ஈச்சங்குடியானது. தேவர்கள் நின்று வழிபட்ட இடம் தேவன்குடியானது. கணபதி பூஜித்த இடம் கணபதி அக்ரஹாரம் ஆனது. தேவி உமையாள் புரத்திலும், நந்தி மதகிலும், கங்கை கங்காபுரத்திலும் நின்று பைரவரை வழிபட்டார்கள் என்கிறது தலபுராணம்.
இத்தனை பெருமைகள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை. இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை.
நம்பிக்கைகள்:
இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வைரவன்கோவில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி