வேட்டகுடி விஸ்வநாதர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
வேட்டகுடி விஸ்வநாதர் சிவன்கோயில்,
வேட்டகுடி, விருத்தாசலம் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608703.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
பிரன்னவர்நாயகி
அறிமுகம்:
அகண்டு விரிந்த தேசிய நெடுஞ்சாலை 140 விருத்தாசலம் – ஜெயம்கொண்டத்தை இணைக்கிறது, இதில் ராஜேந்திரபட்டினம் எனும் பாடல் பெற்ற தலத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் வழியில் 2 கிமீ தூரம் பயணித்தால் வேட்டகுடி கிராமம். முன்னர் வேடுவர்கள் குடியிருப்பாக இருந்திருக்கலாம். பிரதான நெடுஞ்சாலையை ஒட்டியே உள்ளது இந்த சிவன் கோயில். புதிதாக உருவாக்கப்பட்டு சென்ற வருடத்தில் குடமுழுக்கு கண்டுள்ளது. சிவன்கோயில் உருவாக்க பல விதிமுறைகள் உள்ளன, சைவஆகமங்கள் கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரங்கள், கோயில் அமைக்கப்படவேண்டிய இடங்கள் குறித்து தெளிவாக விளக்குகின்றன. இதில் எதிலுமே கட்டுப்படாத வகையில் சில கோயில்கள் காரண காரியமின்றி பெரும் பொருட்செலவில் உருவாக்கப்படுகின்றன. அதனால் காலப்போக்கில் காணாமலும் போகின்றன. அப்படி உருவான ஒரு கோயில் தான் இது.
தெற்கு நோக்கிய முகப்பு கொண்ட கோயில், அதில் வடக்கு நோக்கிய செப்பு கொடிமரம் பெரிய நந்தி ஒன்றும் உள்ளது. இறைவன் விஸ்வநாதர் இறைவி பிரன்னவர்நாயகி இருவரும் கிழக்கு நோக்கிய சன்னதிகள் கொண்டுள்ளனர். அப்படிஎன்றால் இந்த கொடிமரம் நந்தி யாருக்கு? இறைவன் சன்னதி வாயிலில் விநாயகர் பாலமுருகன் எதிரில் சிறிய நந்தியும் உள்ளனர். கருவறை பின்புறம் முன்புறம் வீட்டில் பொருட்கள் வைக்க கட்டப்படும் CupBoard போல இரண்டு அடுக்கில் கட்டப்பட்டு அதில் பெருமாள் ஆஞ்சநேயர் கஜலட்சுமி, ஸ்ரீ லட்சுமி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி, வள்ளி தெய்வானை சமேத முருகன் சூரியன் சந்திரன் பைரவர் உள்ளனர். இதன் கீழ் அடுக்கில் சிறிய சிவலிங்கங்கள் சில வரிசையாக வைக்கப்பட்டு உள்ளன. குறைந்தது நாற்பது லட்சமாவது இக்கோயில் கட்ட செலவு பிடித்திருக்கும், இந்த காசில் அருகாமை TV-புத்தூர் எனும் தெற்குவடக்கு-புத்தூர் சிவன் கோயிலையும் பெருமாள் கோயிலையும் புதுப்பித்து இருக்கலாம்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வேட்டகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி