வெளிச்சை ஆஞ்சநேயர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்
முகவரி
வெளிச்சை ஆஞ்சநேயர் திருக்கோயில், (பரிகார தலம்), வெளிச்சை , திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603103.
இறைவன்
இறைவன் : ஆஞ்சநேயர்
அறிமுகம்
ஆதியில் கஜ கிரி அன்று அழைக்கப்பட்ட இந்த சிறிய மலை மீது பழமையான ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. 108 படிகளை கொண்ட இம்மலைமீது ஆஞ்சநேயர் ஆயுதம் இல்லாமல் திருமேனி கிழக்கு நோக்கியும் முகம் வடக்கு நோக்கியும் காட்சி கொடுக்கும் ஆசிர்வதிக்கும் கோலம். புதுப்பாக்கம் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் பாரி வேட்டை தலம். சிறந்த பரிகாரமாக விளங்கும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். தொடர்புக்கு திரு சுரேஷ் பட்டர்- 9445299105, திரு மோகன் பட்டர்-9444680711, திரு சத்ய நாராயணன்- 9444824722. வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் அருகில் இம்மலை உள்ளது.
நம்பிக்கைகள்
பரிகார தலம் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேற மட்டை தேங்காய், மணி கட்டி வழிபடுகிறார்கள். இங்கு பூஜை முடிந்து வல்புரி சங்கு தீர்த்தம் பக்தர்மீது தெளிப்பது எல்லா தோஷங்களையும் போக்க வல்லதாக கருதப்படுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வெளிச்சை
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை