வெண்ணந்தூர் முத்துகுமாரசுவாமி திருக்கோயில், நாமக்கல்
முகவரி :
வெண்ணந்தூர் முத்துகுமாரசுவாமி திருக்கோயில்,
வெண்ணந்தூர், ராசிபுரம் வட்டம்,
நாமக்கல் மாவட்டம் – 637505.
இறைவன்:
முத்துகுமாரசுவாமி
அறிமுகம்:
வெண்ணந்தூர் முத்துகுமாரசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் கந்த சஷ்டி (1நாள்) முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
நம்பிக்கைகள்:
திருமணத்தடை நீங்கி, நல்லவரன் அமைய வேண்டுவோர் முத்துக்குமாரசுவாமிக்கு வடைமாலை சாத்தி வழிபட விரைவில் அது அமையும் என்பது நம்பிக்கை.
திருவிழாக்கள்:
ஆடி மாதம் நான்காம் வியாழக்கிழமை முத்துக்குமரர் பண்டிகை மாரியம்மன் பண்டிகையுடன் சேர்த்து வெண்ணந்தூர் மக்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மற்ற முருகன் கோவில்களைப் போல இங்கும் சூரசம்ஹார நிகழ்வு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வெண்ணந்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாமக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி