வீரசோழபுரம் சோழீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
வீரசோழபுரம் சோழீஸ்வரர் சிவன்கோயில்,
வீரசோழபுரம், காட்டுமன்னார்கோயில்,
கடலூர் மாவட்டம் – 608306.
இறைவன்:
சோழீஸ்வரர்
அறிமுகம்:
காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ளது வீர சோழபுரம் கிராமம். முட்டம்- கானாட்டுமுள்ளூர் (கானாட்டாம் புலியூர்) வந்து அதன் கிழக்கில் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது இந்த வீரசோழபுரம். இது கொள்ளிடகரையோர கிராமமாக உள்ளது அதனால் ஊரின் நான்கு புறமும் வயல் வெளிகள் பச்சைபசேல் என காட்சியளிக்கிறது. காட்டுமன்னாகோயிலில் இருந்து இவ்வூருக்கு சிற்றுந்து ஒன்றும் உள்ளது. இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன் (கி.பி 1063 – 1070). இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான். இந்த மன்னனின் பெயரில் கொடுக்கப்பட்ட கொடை தான் இந்த வீரசோழபுரம், கீழ்நாட்டில் இந்த ஊர் இருந்து வந்தது. இங்கு இருந்த ஒரு சிவாலயம் சோழர்களால் எடுப்பிக்கப்பட்டது.
பிற்காலத்தில் இக்கோயில் சிதைந்து விட தற்போது புதிதாய் இந்த கோயில் எழும்பி உள்ளது. சிவனும், தென்முகனும் பழம் சிவாலயத்தில் இருந்தவை ஆகும். கோயில் மிக சிறியதாகவே உள்ளது இறைவன் சோழீஸ்வரர் கிழக்கு நோக்கியும் இறைவி தென்முகம் கொண்டும் உள்ளனர். அழகான நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தி. இறைவியும் அழகாக உள்ளார். இறைவன் கருவறைக்குள்ளேயே விநாயகர், தண்டாயுதபாணி முருகன், உள்ளனர். தென்புறம் தென்முகன் சன்னதி கொண்டுள்ளார். கோயில் ஒருகாலம் அருகாமை ஊரில் உள்ள கருப்பேரி குருக்களால் பூஜை செய்யப்படுகிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வீரசோழபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி