விஸ்வநாதபுரம் சிவன்கோயில், கடலூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/327316630_550890896989764_3309220694386191788_n.jpg)
முகவரி :
விஸ்வநாதபுரம் சிவன்கோயில்,
விஸ்வநாதபுரம், பண்ருட்டி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 607105.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
கடலூர்-பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பம் அடுத்துள்ள திருகண்டேச்வரம் கோயிலுக்கு வடக்கில் தென்பெண்ணையாற்றின் தென் கரையில் விஸ்வநாதபுரம் உள்ளது. இங்கு ஊருக்குள் நுழையும் இடத்தில ஒரு சிறிய விநாயகர் கோயில் உள்ளது அதன் மேற்கில் உள்ளது இக்கோயில். பெரிய நீல நிற தகர கொட்டகை இருக்கிறதே அதுதான் இறைவனின் இருப்பிடம். பெரிய கோயில் இருந்து வெள்ளத்தினால் சிதைந்திருக்கலாம். சிறிது தூரத்திலேயே வண்டியை நிறுத்திவிட்டு நடந்து சென்றால் சுற்றிலும் கரும்புகள் ஆளுயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றன, அதன் இரண்டு பார்களின் நடுவில் உள்ள இடைவெளி ஊடே செல்லவேண்டியது தான். அங்கே தகரகொட்டகையின் கீழ் பெரிய லிங்க ஸ்வரூபமாய் வீற்றிருக்கிறார்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/13603697_1114318591974583_6166926557030158036_o-1024x683.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/327316630_550890896989764_3309220694386191788_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2023/02/327556982_1371888216962099_4681297397434497772_n-1024x771.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விஸ்வநாதபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி