Wednesday Dec 18, 2024

விழுப்புரம் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்,பஞ்சவடிஷேத்திரம்)

முகவரி :

பஞ்சவடி ஷேத்திரம் கோவில்

பஞ்சவடி, விழுப்புரம் மாவட்டம் –  605111

இறைவன்:

ஆஞ்சநேயர்

அறிமுகம்:

திண்டிவனம் புதுச்சேரி சாலையில் திருச்சிற்றம்பலம் என்ற இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த இடத்தின் பெயர் பஞ்சவடி. இக்கோயில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆகும். திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி சாலையில் 29 வது கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சாலையில் 9 வது கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த கோயில் புதுச்சேரிக்கு மிக அருகிலே உள்ளது. 

புராண முக்கியத்துவம் :

ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதுபற்றிய விபரம் ரமணி அண்ணா என்பவர் பார்த்த தேவபிரசன்னத்தில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.

நம்பிக்கைகள்:

:

                                     ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்:

12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. ராமர், சீதை, இலட்சுமணன், சத்துருக்கன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய உயர்தூக்கி இருக்கிறது. இதற்கு 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கி.மீ. தூரம் ஒலிக் கேட்கும். பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

மிதக்கும் கல்: சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோவிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.

காலம்

800 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பஞ்சவடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top