விளாங்குறிச்சி பகவதீஸ்வரர் திருகோயில், கோயம்பத்தூர்
முகவரி :
விளாங்குறிச்சி பகவதீஸ்வரர் திருகோயில்,
விளாங்குறிச்சி,
கோயம்பத்தூர் மாவட்டம் – 641035.
இறைவன்:
பகவதீஸ்வரர்
இறைவி:
பகவதீஸ்வரி
அறிமுகம்:
கோவை மாநகருக்கு வடக்கே விளாங்குறிச்சி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது கோவை மாநகர் சத்தியமங்கலம் சாலை அருகே விளாங்குறிச்சி என்னும் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்கு பகவதீஸ்வரி சமதே பகவதீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் இக்கோயிலை அடையலாம். சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
கி.பி.1253-1296 வரை கொங்கு பகுதியை பாண்டியர்கள் ஆட்சி செய்த விவரம் கிடைக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது. இதன் மூலம் அர்த்த மண்டபச் சுவரில் உள்ள மீன் சின்னத்தை கொண்டும் கடினமான கருவறை சுவரை வைத்தும் பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் கோயில் கட்டப்பட்டு இருக்கலாம் என எண்ணப்படுகிறது. ஆலயத்தின் 2000 ஆண்டு நடைபெற்ற திருப்பணியின் போது கோவிலின் பழமை மாறாத விதத்தில் இக்கோயிலை புதுப்பித்து உள்ளனர்.
நம்பிக்கைகள்:
இத்தலத்திற்கு வந்து மனதார பூஜிப்பவர்கள் வாழ்வில் வேண்டுவன எல்லாம் நிறைவேறுகிறதாம். திருமணத்தடை ஏற்பட்டவர்கள் சித்திரையில் நடக்கும் சுவாமியின் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு வஸ்திரம் சாற்றி பின் அதை அணிந்து கொண்டு சுவாமிக்கு மாலை அணிவித்து வேண்டுதல் செய்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுகிறது.
குழந்தை பேறு இல்லாதவர்கள் 7 பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு சுவாமிக்கு பழங்களை படைத்து, பின்பு அந்த பிரசாதங்களைப் பெற்று சாப்பிட்டு வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கிறதாம்.
சரிவர பேச இயலாத குழந்தைகளின் பெற்றோர் குழந்தையுடன் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு தேனாபிஷேகம் பிரசாதத்தை அவர்களை உட்கொள்ள வைத்தால் பேச்சுத்திறனை அதிகரிக்க செய்கிறதாம்.
சிறப்பு அம்சங்கள்:
கிழக்கு நோக்கிய ஆலயத்தில் நுழைந்தவுடன் தனி மண்டபத்துடன் கூடிய விளக்குதூண் அமைந்துள்ளது. சதுரமான அடிப்பகுதியில் முருகன், காமதேனு, விநாயகர் மற்றும் திரிசூலம் ஆகியவை புடைப்புச் சிற்பங்களாக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. பலிபீடத்தின் அருகே நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்த நந்தி எம்பெருமானை ஈசனை நோக்கி வைத்துள்ளார். அதை தொடர்ந்து மண்டபம், மகா மண்டபம் உள்ளது.
மகாமண்டபத்தின் நுழைவாயிலில் விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், ஆகியோருக்கு தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன. அர்த்த மண்டப விதானத்தில் புடைப்பு சின்னமாக சந்திர கிரகண காட்சி அமைந்துள்ளது. அர்த்தமண்டபத்தில் ஆடவந்த நாட்டின் பல பாகங்களிலும் தெற்கு நோக்கிய வருகின்றனர் கருவறையில் பகவதி ஈஸ்வரலிங்கம் எழுந்தருளியுள்ளார். ஈசன் மற்றும் நந்தீஸ்வரர் திருமேனிகள் வெண்கற்களாலானது. கருவறை மீது உள்ள விமானம் ஏக கலசத்துடன் மூன்று நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. சுதை சிற்பங்கள் விமானத்தை அலங்கரிக்கின்றன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நான்முகன் துர்க்கை அருள்கின்றனர். கோமுகம் அருகே சண்டீஸ்வரர் சன்னதி உள்ளது.
மூலவர் சந்நிதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கிய பகவதீஸ்வரி சன்னதி உள்ளது இதுவும் கருவறை, அர்த்த மண்டபம் என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்திற்கு வெளியே நவகிரக சந்நிதியில் தெற்கு நோக்கிய பைரவர் சன்னதியில் இருக்கின்றனர். தென்மேற்கு பகுதியில் 21 முகங்களுடன் படம் எடுத்த நிலையில் நாகத்தின் மத்தியில் பசுவுடன் அமைந்த குழலூதும் கிருஷ்ணர் சிற்பம் காணப்படுகிறது. அதனருகே சப்தகன்னியர் திருவுருவங்கள் அமைந்துள்ளன.
வெள்ளை நாகம், கருநாகம், கோதுமை நிற நாகம் என மூன்று நாகங்களில் இங்கு வாழ்கின்றனவாம். பிரதோஷத்தன்று ஏதாவது ஒரு வேலையில் இந்த நாகலிங்கம் ஈசனை வழிபட்டு செல்லுமாம். இதை கோயில் ஊழியர்கள் பக்தர்கள் பலர் கண்டுள்ளனர். ஆனால் நாங்கள் யாரையும் தீண்டியதில்லை. வைகாசி மாதத்தில் குறிப்பிட்ட நாளில் சூரிய சூரிய ஒளிக்கதிர்கள் ஈசன் மீது பரவுகின்றது.
திருவிழாக்கள்:
காமிக ஆகமப்படி தினமும் ஒரு கால பூஜை நடந்து வருகிறது. தமிழ் மாதப் பிறப்பு, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வருட திருவிழாக்களில் சித்திரையில் மீனாட்சி கல்யாணம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி விழா, கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்காபிஷேகம், அனுமன் ஜெயந்தி, மகாசிவராத்திரி, வருடத்திற்கு ஆறுமுறை நடராஜர் அபிஷேகம் என வருட விழா கொண்டாடப்பட்டாலும் ஆனி மாதத்தில் அனுஷ நட்சத்திரத்தில் நடைபெறும் தேரோட்டமே பெருவிழாவாகும்.
காலம்
கி.பி.1253-1296 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விளாங்குறிச்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோயம்பத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்