விருத்தாசலம் ஸ்ரீ பட்டீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/284377259_7468025483270497_7532971800731179707_n.jpg)
முகவரி :
விருத்தாசலம் ஸ்ரீ பட்டீஸ்வரர் திருக்கோயில்
விருத்தாசலம் நகரம்,
கடலூர் மாவட்டம் – 606001.
இறைவன்:
ஸ்ரீ பட்டீஸ்வரர்
அறிமுகம்:
விருத்தாசலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஊரென்றால் அது மிகையல்ல. பல்லவர் முதல் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், உள்ளிட்ட பல்வேறு அரசர்களின் திருப்பணிகள் பெற்ற ஊர். தெய்வீக பசுவான காமதேனுவின் மகள்கள் நந்தினி, பட்டி எனும் இருவராகும் அதில் பட்டி பூசித்த லிங்கம் இதுவென கூறுகின்றனர். இங்கே தெற்கு நோக்கி செல்லும் ஜெயம்கொண்டம் சாலையில் பிரதான கடைத்தெருவில் உள்ளது பட்டிஸ்வரர் திருக்கோயில். பலகாலமாக கட்டிட ஆக்கிரமிப்பில் இருந்த பட்டிஸ்வரர் சற்றே வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.
விருத்தாசலம் கிராமநிர்வாக அலுவலகத்தின் பின்புறம் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது இந்த பட்டீஸ்வரர் கோயில். ஒற்றை கருவறையில் இறைவன் பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார். தற்போதைய தரை மட்டத்தில் இருந்து இறைவன் மூன்று அடி கீழே உள்ளார். காலமாற்றத்தில் கருவறை சுற்றிய பகுதிகள் மேடாகிவிட கருவறை பள்ளமாகி போயுள்ளது. இறைவனின் எதிரில் சிறிய நந்தி உள்ளார். இக்கோயிலின் தென்புறம் கிழக்கு நோக்கிய பழமையான விநாயகர் உள்ளார். அவரின் முன்னர் ஒரு நந்தியை வாகனமாக நிலைப்படுத்தி உள்ளனர். சிறிய மூஞ்செலியும் விநாயகரின் அருகிலுள்ளது. இவருக்கு ராஜகணபதி என பெயர். இந்த இரு மூர்த்திகளை தவிர வேறெதுவும் தற்போதில்லை.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/282130824_7468024829937229_7636114992410457513_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/282527110_7468024649937247_3762675308932572981_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/283382664_7468025336603845_3903698249486941475_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/284348870_7468025206603858_3070094052436348746_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/284390753_7468025136603865_1458627694081260256_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/284687112_7468025596603819_8460013848491674260_n-771x1024.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி