விருத்தாசலம் ஏகநாயகர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
ஏகநாயகர் சிவன்கோயில்,
விருத்தாசலம் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 606003.
இறைவன்:
ஏகநாயகர்
அறிமுகம்:
விருத்தாசலத்தின் தெற்கில் கருவேப்பிலங்குறிச்சி செல்லும் சாலையில் புறவழி சாலையை தாண்டியதும் இடது புறத்தில் உள்ளது இந்த ஏகநாயகர் கோயில். கிழக்கு மேற்கில் நீண்டிருக்கிறது பதினெட்டுகால் மண்டபம் ஒன்று அதனை கடந்து உள்ளே சென்றால் கருவறையில் மேற்கு நோக்கியபடி ஏகநாயகர் எனும் பெயரில் எம்பெருமான் வீற்றிருக்கிறார். அவரின் எதிரில் அழகிய நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளது. கருவறையை சுற்றி அகன்ற சுற்றுமண்டபம் அமைந்துள்ளது. திருவிடைமருதூரிலுள்ள சோமாஸ்கந்தரை ஏகநாயகர் என்று அழைப்பர், ஆயினும் இவருக்கு இப்பெயர் எப்படி வந்தது என அறியக்கூடவில்லை.
சிவன் சன்னதியை தவிர வேறு தெய்வ சன்னதிகள் ஏதுமில்லை. பெரிய நிலப்பரப்பில் சமீப காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில் எனினும் அழகிய கருங்கல் தூண்களை கொண்டு முற்றிலும் கருங்கல் கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவன் அருகில் உள்ள ஓடைக்கரையில் இருந்ததாகவும் பின்னர் ஒரு கொட்டகை அமைத்து வழிபாடு செய்யப்பட்டதாகவும் கூறுவர். கடந்த 2018 ஜூனில் இகோயில் குடமுழுக்கு கண்டது. திருக்கோயிலின் தென்புறம் வடக்கு பார்த்த விநாயகர் சன்னதி ஒன்றுள்ளது. அதனருகில் பெரிய கோசாலை ஒன்று பராமரிக்கப்படுகிறது. பிரதான சாலையில் உள்ளதால் மக்கள் சீரான அளவில் வந்து செல்கின்றனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
கடலூர்