வழுத்தூர் கைலாசநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
வழுத்தூர் கைலாசநாதர் சிவன்கோயில், வழுத்தூர், பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 614 210.
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி: சுந்தராம்பிகை
அறிமுகம்
கும்பகோணம்-தஞ்சை சாலையில் ராஜகிரி தாண்டி உள்ளது வழுத்தூர். பேரூந்து நிறுத்தத்தின் அருகிலேயே வலது புறம் உள்ளது கோயில். உங்களில் பலர் சிதிலமடைந்த இக்கோயிலை பேரூந்தில் இருந்தபடி பார்த்திருக்க கூடும் . பிரதான சாலையில் இருக்கும் பழமையான சிவன் கோயில். இவ்வாறு இருக்க நீங்களும் ஒரு காரணம்தான். ஆம் வயதான தாய் தந்தை கிழிந்த பாயில் படுத்துறங்கினால் அது மகனின் அலட்சியம் என்றுதானே பொருள். பல்லவராயர்கள் வழியினர் வாழும் ஊர்களில் இதுவும் ஒன்று எனப்படுகிறது வைத்தூர் என்பதே வழுத்தூர் என மருவியது. கிழக்கு நோக்கிய அழகிய முதன்மை கோபுரம், அதற்க்கு முன்னாள் சிறிய நந்தவன திடல். முற்றிலும் செங்கல்லால் ஆன செங்கல் தளி. இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவை தெற்கு நோக்கியும் உள்ளனர், அவர்களின் எதிரில் நந்திகள் இரண்டு உள்ளன. விநாயகரின் தோரண வாயிலை பாருங்கள் எத்தனை உழைப்பு இங்கே கொட்டப்பட்டிருக்கிறது என புரியும். அழகிய ஆடல் விநாயகர். அடுத்த சிற்றாலயம் முருகன் வள்ளி தெய்வானையுடையது, அடுத்தாற்போல் ஜேஷ்டா தேவியும் அதனை ஒட்டிய அடுத்த சன்னதியில் ஒரு பெண் தெய்வம் யாரென தெரியவில்லை. கருவறை கோட்டத்தில் விநாயகர் இடத்தில ஒரு லிங்க பாணன் வைக்கப்பட்டுள்ளது. அடுத்து தென்முகன் லிங்கோத்பவர், சந்திரன் கருவறையின் வடக்கு கோட்டத்தில் உள்ளார். இது சமீபத்தில் தவறாக யாரேனும் தூக்கி வைத்திருக்கலாம் கோட்டத்து துர்க்கை மட்டும் எடுக்கப்பட்டு புதிய சிற்றாலயத்தில் இருக்கிறார். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைலாசநாதர், காலம் தின்றது போக மீதமுள்ளதை காக்க வேண்டுகிறேன். கும்பகோணம்- தஞ்சை சாலையெங்கும் எங்கும் பச்சை கொடி பறக்க ஆரம்பித்துவிட்டது. .அக்கிரகாரங்கள் காலியாகிவிட்டன, மீதமிருப்பது ஆங்காங்கே சில ஆலயம் மட்டும் தான். ஆங்காங்கே வாழும் இந்துக்களுக்கு நம்பிக்கையூட்ட பெருமளவில் இப்பகுதி சிவாலயங்களுக்கு செல்லுங்கள். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வழுத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி