வள்ளுவக்குடி வேதபுரீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
வள்ளுவக்குடி வேதபுரீஸ்வரர் சிவன் கோயில் வள்ளுவக்குடி, சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 116
இறைவன்
இறைவன் : வேதபுரீஸ்வரர்
அறிமுகம்
முருகனிடம் உபதேசம் கேட்ட இறைவனுடன் வந்த மகாவிஷ்ணு வழிபட்ட தலம் ஆதலின் ‘கொண்டல் வண்ணன் குடி’ என்று இஃது பெயர் பெற்றது. ‘கொண்டல் வண்ணன் குடி’ என்பது மருவி, கொண்டல் வள்ளுவக்குடி என்றாகி; ஊர் இரண்டாகப் பிரிந்தபோது கொண்டல் – வள்ளுவக்குடி என்றானது. இது சீர்காழியில் இருந்து ஆறு கிமி தூரத்தில் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்புடைய வளாகத்தில் இறைவன் கிழக்கு நோக்கியுள்ளார் இறைவி தெற்கு நோக்கியுள்ளார். எதிரில் ஒரு பெரிய குளம் உள்ளது. இறைவன் வேதபுரீஸ்வரர் இறைவி பெயர் அறியமுடியவில்லை. கருவறை சுவர்களில் வெளிப்புறம் சில கல்வெட்டுக்கள் உள்ளன. பல இடம் மாற்றியமைக்க பட்டுள்ளது. அருகில் சண்டேசர், கதை சிற்பங்கள் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.. கருவறை கோட்டத்தில் தென்முகன் உள்ளார். பிரகாரத்தில் விநாயகர் முருகன், மனோன்மணி அம்மன் சிற்றலயங்கள் உள்ளன. இவை தவிர தென்முகன் அருகில் கிழக்கு நோக்கிய சிறிய சன்னதியில் உள்ளது யார் என அறியமுடியவில்லை. தென்புறம் நோக்கியுள்ள பிரதான அம்மன் பெயர் அறிய முடியவில்லை.கோயில் வளாகம் உழவார மக்களை எதிர்நோக்கியுள்ளது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வள்ளுவக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி