வடுவூர்-வடபாதி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
வடுவூர்-வடபாதி கைலாசநாதர் சிவன்கோயில்,
வடுவூர்-வடபாதி, மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614019.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
வடிவழகி
அறிமுகம்:
ராஜமன்னார்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பஸ்சில் சென்றால் ½ மணி நேரத்தில் வடுவூரை அடையலாம். தஞ்சை அரசர்களால் ஓர் ஏகாதசி தினத்தன்று வித்வான்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வடுவூரை ‘ஏகாதசி கிராமம்’ எனவும் அழைப்பர்
சைவம் வைணவம் இரண்டும் இங்கே நேர்கோட்டில் உள்ளது சிறப்பு. இக்கோயிலுக்கு செல்லும் வழி கொஞ்சம் சிரமமான ஒன்றாக உள்ளது. பிரதான தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அம்மாபேட்டை சாலையில் சென்று பின்னர் எடகீழையூர் சாலையில் திரும்பி சில பல தெருக்களில் திரும்பி செல்லவேண்டும். ஊரில் தனித்து உள்ளது சிவன் கோயில். பெரிய இரண்டு ஏக்கர் பரப்பிலான திடல் பரப்பு அதில் அமைந்துள்ளது சிவன் கோயில். பெரிய உயர்ந்த மதில் சுவர்கள். தாண்டி உள்ளே சென்றால் இறைவன் கைலாசநாதர் மேற்கு நோக்கியுள்ளார். இறைவி வடிவழகி தெற்கு நோக்கியுள்ளார்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
சிறப்பு அம்சங்கள்:
மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 6 நாள் சூரிய ஒளி இந்த இறைவன் மீது படுவது தனிச்சிறப்பாகும். சூரியதேவன் வழிபட்டதால் பாஸ்கர ஷேத்ரம் எனப்படுகிறது. தென்மேற்கில் விநாயகர் சிற்றாலயம் வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிற்றாலயம். இறைவன் கருவறை கோட்டத்தில் துர்க்கை மற்றும் தென்முகன் மட்டும் உள்ளனர். சண்டேசர் அழகாக உள்ளார். வடகிழக்கு பகுதியில் நவகிரகம், பைரவர் சன்னதிகள் உள்ளன. விநாயகரின் பின்புறம் மதில் சுவரை ஒட்டியபடி ஒரு சிறிய சிவலிங்கம் உள்ளது. நாகலிங்கம், நவவில்வம் மரங்கள் செழிப்புடன் உள்ளன. கோயில் பின்புறம் பெரிய குளம் ஒன்றுள்ளது. பங்குனி உத்திர விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பால் காவடி, செடல் காவடி எடுப்பது இங்கு வழக்கம்.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடுவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி