வடவஞ்சார் கைலாசநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/305403935_8002719079801132_6874212970775090989_n.jpg)
முகவரி :
வடவஞ்சார் கைலாசநாதர் சிவன்கோயில்,
வடவஞ்சார், மயிலாடுதுறை வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609201.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
காமாட்சி
அறிமுகம்:
மயிலாடுதுறையில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் பட்டவர்த்தி சாலையில் 13-கிமீ சென்றால் வைத்தீஸ்வரன்கோயில் சாலையில் உள்ள இளந்தோப்பு வந்தடையலாம். இங்கிருந்து திருகுரக்காவல் சாலையில் 3 கிமி சென்றால் வடவஞ்சார் அடையலாம். குத்தாலத்தை ஒட்டி செல்லும் சிறிய வாய்க்கால் ஒன்று அஞ்சாறு என அழைக்கப்படுகிறது. அஞ்சாற்றின் வடகரையில் இருப்பதால் வடஅஞ்சாறு ஆனது. ஊருக்கு சற்று முன்னதாகவே உள்ள ஒரு ஐயனார் கோயில் அருகில் இடதுபுறம் திரும்பும் தெருவில் சென்றால் சிவன் கோயில் கோயிலை சுற்றிலும் வீடுகள் ஏதுமில்லை, சுற்றிலும் வயல்வெளிகள் தான்.
புராண முக்கியத்துவம் :
இறைவன் – கைலாசநாதர் இறைவி – காமாட்சி உயர்ந்த மதில்சுவர்களுடன் ஒரு அலங்கார வளைவு உள்ளது. இந்த இடத்தில் இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இறைவியும் தெற்கு நோக்கிய ஒரு கருவறை கொண்டுள்ளார். இரு கருவறைகளையும் சேர்க்கும் வண்ணம் ஒரு மண்டபம் சிமெண்டால் சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த தல இறைவன் இந்திரனுக்கு தம்பதி சமேதராக காட்சி கொடுத்ததாக கூறுகிறார்கள். கருவறை கோட்டங்களில் புதிதாக செய்யப்பட தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். வழமை போல் சிற்றாலயத்தில் சண்டேசர் உள்ளார். பிரகாரம் சுற்றிவர ஏதுவாக சிமென்ட் சதுர கற்களை பாவியுள்ளனர். தென்மேற்கில் விநாயகர் அடுத்து வள்ளி தெய்வானை சமேத முருகர் மகாலட்சுமி ஆகியோர் அழகிய சிற்றாலயம் கொண்டுள்ளனர். வடகிழக்கில் நவகிரகம் உள்ளது. . நுழைவாயிலின் உள்புறம் மதில் சுவருடன் சூரியன் சந்திரன் பைரவர் சன்னதிகள் சிறிய மாடம் போல் கட்டப்பட்டு உள்ளன. இக்கோயிலுக்கு சற்று முன்னதாக வடவஞ்சார் வெங்கடாசலபதி பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்ட பின்னர் தான் திருக்குரக்குக்கா பாடல் பெற்ற தலத்தில் உள்ள அனுமனை வணங்க செல்லவேண்டும்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305267531_8002720829800957_6157656036068492090_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305309553_8002720326467674_8566062171652502204_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305402303_8002728396466867_4468534014275471069_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305403935_8002719079801132_6874212970775090989_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305487590_8002720066467700_7473461148466550009_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305487590_8002720513134322_5405076652871044905_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305491149_8002719246467782_1197044796235234371_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/306003336_8002720033134370_1795586451858080179_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/306962951_8002719576467749_647679930718725724_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/307016347_8002720529800987_6859209623123581790_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/307029941_8002719586467748_2943609609581191113_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/307317103_8002719019801138_5739437853968706550_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/307381053_8002720989800941_283555339263189438_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/307587025_8002719673134406_5168269638534538992_n-1024x771.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடவஞ்சார்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி