வடபாதி சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
வடபாதி சிவன்கோயில்,
வடபாதி, மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருவாரூர் – மன்னார்குடி சாலையில் குறுக்காக செல்லும் பாண்டவை ஆற்றை தாண்டி ½ கிமீ சென்று பாரதிமூலங்குடி எனும் ஊரில் இடது புறம் செல்லும் சாலையில் 1 கிமீ சென்றால் வடபாதி கிராமம் உள்ளது. இந்த வடபாதியில் பெரிய குளத்தின் கரையில் ஒரு சிவாலயம் இருந்தது, காலப்போக்கில் சிதைவுற்றவுடன் அதில் இருந்த லிங்கமூர்த்தியை எடுத்து தனியாக ஒரு தகரகொட்டகை போட்டு வைத்துள்ளனர். மூர்த்தியும் பெரிது கீர்த்தியும் பெரிது. முகப்பில் விநாயகமூர்த்தி ஒன்றும் சண்டேசர் சிலை ஒன்றும் உள்ளன. இறைவன் அருகில் உடைந்த அம்பிகை தலை மட்டும் இருப்பதை காண மனம் கனக்கிறது.



காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடபாதி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
Location on Map
