வடக்கு மாங்குடி அருணாசலேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
வடக்கு மாங்குடி அருணாசலேஸ்வரர் சிவன்கோயில், வடக்கு மாங்குடி, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614210
இறைவன்
இறைவன்: அருணாசலேஸ்வரர் இறைவி: அபிதகுஜாம்பாள்
அறிமுகம்
கும்பகோணம்- தஞ்சை சாலையில் உள்ள்ளது அய்யம்பேட்டை , இந்த அய்யம்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து தெற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது வடக்குமாங்குடி. மான்குடி மருவி மாங்குடி ஆனது. இவ்வூர் மாங்குடி, அகரமாங்குடி என இரு பாதியாக இதன் தெற்கில் உள்ளது. வெள்ளாளர் தெருவின் மேற்கு கோடியில் சிவன்கோயிலும், தெரு மத்தியில் காளியம்மன் கோயில் ஒன்றும் உள்ளது. அதன் வடபுறத்தில் குளமும் உள்ளது, குளம் ஆக்கிரமிப்பில் கோயில் மட்டும் இன்னும் நம் பார்வைக்கு. விதி வசத்தால் இரு குடும்பங்கள் மட்டும் கோயிலை ஒட்டி வாழ்கின்றனர். கோயிலின் சாவி அந்த வீட்டில் உள்ளது. சிறிய கோயில் எனினும் அதனை நல்ல முறையில் பராமரிக்கிறது அந்த குடும்பம். இறைவன் கிழக்கு நோக்கிய அருணாசலேஸ்வரர், இறைவி அபிதகுஜாம்பாள், எதிரில் சிறிய நந்தி, பிரகாரத்தில் விநாயகர், முருகர், அனுமன், பைரவர், சனி பகவான், நவகிரகம், பெரிய வில்வமரம். சிறிய கோயில் என்றாலும் இறைவனின் முன்னால் நிற்கும்போது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அங்கே நம் பாவக்கணக்குகள் தீர்க்கப்பட்டுவிடுகின்றன. தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கும் இந்த ஈர்ப்பு கிடைப்பது நம் கையில் தான் உள்ளது.
புராண முக்கியத்துவம்
இராமசீதா காவியத்தில் வரும் மாரீசன் எனும் மானை தேடிய ஊர் பொன்மான் மேய்ந்த நல்லூர். இதனை மெய்பிக்கும் விதமாக உள்ளது இந்த பகுதியில் உள்ள ஊர்கள் மான்தங்கியஅகரம்(மாதாகரம்), மான்நல்லூர்(மானல்லூர்), புள்ளமான்குடி (புள்ளமாங்குடி), மான்மேய்ந்ததிடல்(மட்டியாந்திடல்), பெருமான் குடி(பெருமாங்குடி),பெருமான்கள் நல்லூர் (பெருமாக்கநல்லூர்) மான் குண்டு(மாங்குண்டு), மான்தங்கிய கரை (மாதங்கரை), மாயமான்பேட்டை(நாயகன்பேட்டை) இது போல் இவ்வூருக்கு மான்குடி என பெயர். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடக்குமாங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி