லிங்கத்தடி சிவன்கோயில், காரைக்கால்
முகவரி
லிங்கத்தடி சிவன்கோயில், கொம்யூன் கீழையூர் / லிங்கத்தடி, திருமலைராயன்பட்டினம், காரைக்கால் மாவட்டம்,
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
பிரதான NH32 திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலை தொட்டபடி நாகை நோக்கி செல்கிறது, அதனை அடுத்து சில நூறு மீட்டர் தூரத்தில் இடதுபுறம் ஒரு சிறிய சாலை பிரிகிறது அதில் சென்றால் கீழையூர் கிராமம் உள்ளது. ஊரின் கடைசியில் லிங்கத்தடி எனும் பகுதியில் சாலையோரத்தில் சிறிய தகர கொட்டகையில் எம்பெருமான் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக விளங்கிய மன்னன் திருமலைராயன் பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பெரிய பட்டினம் ஒன்றை உருவாக்கி அவரது பெயரை சூட்டினார், அதில் 108 சிவாலயங்களை உருவாக்கி வைத்திருந்தார், காலப்போக்கில் பல அழிந்துபட்டன. அவற்றில் இருந்த லிங்கங்கள் ஆங்காங்கே இவ்வாறு வீற்றிருக்கின்றன. #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
15 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி