லக்காபுரம் குமார சுப்பிரமணியர் திருக்கோயில், ஈரோடு
முகவரி :
அருள்மிகு குமார சுப்பிரமணியர் திருக்கோயில்,
லக்காபுரம்,
ஈரோடு மாவட்டம் – 638002.
இறைவன்:
குமார சுப்பிரமணியர்
அறிமுகம்:
ஈரோடு மாவட்டம் ராதாபுரத்தில் அமைந்து அக்காலத்தில் செம்மலை என்று வழங்கப்பட்ட மலையை பின்னர் பெயர் திரிபடைந்து இன்று செண்பக மலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு 500 ஆண்டுகள் பழமையான குமார சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயிலாக இருந்தாலும் சிறப்பான முறையில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. 53 படிகள் கொண்ட சிறு குன்றின் மீது அமைந்துள்ளது இந்த ஆலயம். ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் லக்காபுரத்தில் செண்பக மலையில் குமார சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
பாதையின் வலது பக்கத்தில் சுதைவடிவச் சிற்பமாக முருகனின் சிலை வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சி மலை உச்சியில் தனிச் சன்னதியில் உள்ள இடும்பன் அடுத்துள்ள தீபஸ்தம்பம் காணப்படுகிறது. அதன்பின் கோவிலுக்குள் நுழைய விஸ்தாரமாக கட்டப்பட்ட அழகிய முன் மண்டபத்தில் நந்தாவிளக்கு, கொடிமரம், பலிபீடம், மயில் வாகனன், அர்த்த மண்டபத்தை கடந்து கருவறை உள்ளது. அர்த்த மண்டபத்திற்கு வெளியே இருபுறமும் துவாரபாலகர்கள் விநாயகர் மாற்றங்களை காணலாம். கருவறையில் குமார சுப்பிரமணியர் என்ற திருநாமத்தோடு முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார் இடத்தை இடுப்பில் ஊன்றி எழிலாக காட்சி தருகிறார்.
நம்பிக்கைகள்:
கல்வித்தடை நீங்க, வேலை வாய்ப்பு கிட்ட, திருமண தடை, குழந்தை பாக்கியம் அமைய என பல்வேறு வேண்டுதல்களை போக்க செவ்வாய்கிழமை காலை 10 மணி அளவில் தினசரி பூஜை நடத்தப்படுகின்றது இதில் கலந்து கொண்ட பலர் வாழ்வில் திருப்பங்கள் பல கண்டு நலமோடும் வளமோடும் வாழ்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் திருச்செங்கோட்டில் கோயில் கொண்டுள்ள அர்த்தநாரீஸ்வரரை நோக்கி எழுந்தருளி உள்ளது சிறப்பு. கோவிலின் உட்புற சுற்றுச்சுவரில் பளிங்கு கற்களில் கந்தசஷ்டிகவசம் செதுக்கப்பட்டுள்ளது. வெளிப் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி நவகிரக சன்னதிகள் உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் கண்டிருந்தாலும் இன்றும் கோயில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. மலைக்கு அருகே அமைந்துள்ள மற்றொரு சிறப்பம்சம் விநாயகர் எழுந்தருளியுள்ளார் விநாயகர் மலை என்று அழைக்கப்படுகிறது இரு முலைகளுக்கும் நடுவே குளம் ஒன்றும் உள்ளது.
திருவிழாக்கள்:
இக்கோயிலில் ஆடி அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடுகள், வைகாசி விசாகம், கந்தசஷ்டி கல்யாணம், கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
லக்காபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஈரோடு
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்