ரிஷியூர் ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவாரூர்
முகவரி :
ரிஷியூர் ஏகாம்பரேஸ்வரர் கோயில்,
ரிஷியூர், நீடாமங்கலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 613703.
இறைவன்:
ஏகாம்பரேஸ்வரர்
இறைவி:
காமாட்சியம்மன்
அறிமுகம்:
ராஜமன்னார்குடி – கும்பகோணம் சாலையில் உள்ள நீடாமங்கலத்தின் தெற்கில் 6 கிமீ தூரத்தில் ரிஷியூர் உள்ளது. சோழர்களின் பாம்பணி கூற்றத்தில் இருந்த ஊராகும் அக்காலத்தில் இவ்வூர் பிழிசூர் என அழைக்கப்பட்டுள்ளது. விஸ்வநாத மகரிஷி வழிபட்டு பேறு பெற்ற தலமென்பதால் ரிஷியூர் ஆனது. இந்த ஊரில் உள்ள சிவன்கோயில் இறைவன் திருஅகத்தீஸ்வரமுடையார் என அழைக்கப்பட்டுள்ளார். இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன. 1.கைலாசநாதர் 2.ஏகாம்பரேஸ்வரர். இன்று நாம் ஏகாம்பரேஸ்வர் கோயிலை பார்ப்போம். இறைவன்-ஏகாம்பரேஸ்வரர் இறைவி-காமாட்சியம்மன் கிராமத்தின் மையப்பகுதியில் உள்ளது.
இந்த கோயில், பழமையான கோயில் சிதைவடைந்த போது முகப்பு மண்டபம் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டு எளிமையாக திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. இறைவன் ஏகாம்பரேஸ்வரர் கிழக்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார், அம்பிகை காமாட்சியம்மன் தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இறைவன் எதிரில் நந்தி பலிபீடம் உள்ளது. கருவறை வாயிலில் விநாயகர் முருகன் வள்ளி தெய்வானை, மற்றும் லட்சுமி நாராயணர் மற்றும் சண்டேசர் என அனைத்து மூர்த்திகளுமே மண்டபத்தின் உள்ளேயே வைக்கப்பட்டு உள்ளன. கருவறை கோட்டங்கள் என எதுவுமில்லை. சுற்று மதில் சுவர் உள்ளது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ரிஷியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நீடாமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி