ராயபுரம் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி
ராயபுரம் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில் ராயபுரம், நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613 803
இறைவன்
இறைவன் : சுந்தரேஸ்வரர் இறைவி : மீனாட்சி
அறிமுகம்
கும்பகோணம் மன்னார்குடி சாலையில் உள்ள நீடாமங்கலம், பூவனூர் தாண்டியவுடன் அடுத்த ஒரு கிமி தூரத்தில் மேற்கு நோக்கிய சாலையில் இரண்டு கிமி சென்றால் ராயபுரம் அடையலாம். ராயம்புரம் எனவும் அழைக்கப்படுகிறது. ஊரில் இருந்து சற்று தனித்து வடகிழக்கில் உள்ளது சிவன்கோயில் கோயில் எதிரில் பெரிய குளம் ஒன்றுள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில் சிறியதான கோயில் தான். பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட 80 சுந்தரேஸ்வரர் கோயில்களில் இதுவும் ஒன்று எனப்படுகிறது. இறைவன்- சுந்தரேஸ்வரர் இறைவி மீனாட்சி. இறைவன் முன்னர் நீண்ட கூம்பு வடிவ மண்டபம் உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ராயபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி