Saturday Jan 18, 2025

ராம்போத ஆஞ்சநேயர் கோவில், இலங்கை

முகவரி :

இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்,

வெவண்டன் ஹில்ஸ்

ராம்போத கிராமம்

ராம்போத, இலங்கை – 20590.

இறைவன்:

ஆஞ்சநேயர்

அறிமுகம்:

ராம்போத (இறம்பொடை) ஆஞ்சநேயர் கோவில் இலங்கையின் மலையகத்தில் உள்ள ஒரு அனுமன் ஆலயம் ஆகும். இது நுவரெலியா மாவட்டத்தில் கம்பளை – நுவரெலியா பிரதான பாதையில் ராம்போத நகருக்கு அருகிலுள்ள மலை ஒன்றின் உச்சியில் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோவில் இலங்கை சின்மயா மடாலயத்தினரால் நிருவகிக்கப்படுகின்றது.

புராண முக்கியத்துவம் :

றம்பொடை என்று அழைக்கப்படுகின்ற இந்த பிரதேசத்தை சிலர் இராமாயணத்துடன் தொடர்புபடும் வகையில் ராம்படை என்று குறிப்பிடுகின்றனர். இராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்தி வந்த போது சீதையைத் தேடி வந்த அனுமன் இந்தப்பிரதேசத்திலும் சீதையைத் தேடியதாகவும் இராவணனுடன் போர் செய்வதற்கு ராமர் படையொன்று இந்தப்பிரதேசத்தில் தயாராகவிருந்ததாகவும் இதனால் ராம்படை என்ற பெயர் வந்ததாகவும் காலப்போக்கில் இறம்பொடையாக பெயர் திரிபடைந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

இந்த ஆலயம் சுவாமி சின்மயானத்தரின் விருப்பத்துக்கேற்ப 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் சுவாமிகள் இலங்கை வந்திருந்த போது, இந்த இறம்பொடையில் உள்ல வெவண்டன் மலைப் பகுதியைக் கண்டு, அதற்கு “இராம்போதை” (இராமர் பற்றிய அறிவு) என்ற பெயரையும் சூட்டி, மும்பையில் உள்ள குருகுல வேதாந்தக் கல்வி நிலையம் போன்று இலங்கையிலும் அதுபோன்ற ஆசிரமத்தை இவ்விடத்தில் அமைக்க வேண்டினார்.

இத்திட்டத்திற்காக 10 ஏக்கர் நிலம் ஒன்றை இலங்கை அரசிடம் இருந்து சின்மயா மடத்தினர் கொள்வனவு செய்தனர். 1996 ஆம் ஆண்டில் சுவாமி தேஜோமயானந்தர் இலங்கைக்கு வந்தபோது இவ்விடத்தில் பக்த அனுமன் ஆலயம் அமைக்க ஆசி வழங்கினார். 1997 ஆம் ஆண்டில் ஆலயத்துக்கான பூமி பூசை நடைபெற்றது. மகாபலிபுரத்தில் 18 அடி உயர அனுமர் சிலை வடிவமைக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டில் இவ்விடத்தில் பிரதிட்டை செய்யப்பட்டது. பின்னர் 2001 ஏப்ரல் 8 ஆம் நாள் குடமுழுக்கு நடைபெற்றது.

காலம்

2001

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ராம்போத

அருகிலுள்ள இரயில் நிலையம்

கொழும்பு

அருகிலுள்ள விமான நிலையம்

ஹட்டன்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top