ராதாநல்லூர் சிவன்கோயில்,திருவாரூர்
முகவரி :
ராதாநல்லூர் சிவன்கோயில்,
ராதாநல்லூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610103.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருவாரூரின் தெற்கில் செல்லும் திருத்துறைபூண்டி சாலையில் 7கிமீ சென்றால் மாங்குடி உள்ளது இதன் மேற்கில் உள்ள பூசலாங்குடி வழியாக இரண்டு கிமீ தூரம் சென்றால் ராதாநல்லூர் எனும் சிற்றூர் அடையலாம். இது வெள்ளியாற்றின் வடக்கில் அமைந்துள்ளது. ஊரில் இருந்து தனித்து ஒரு குளத்தின் கரையில் அமைந்துள்ளது இந்த சிவன் கோயில். பழமையான கோயில் சிதிலமடைந்த பின் உருவான புது கோயில் தான் இது. கிழக்கு நோக்கிய இறைவன், தெற்கு நோக்கிய இறைவி இருவருக்கும் அழகிய கருவறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இரு கருவறைகளையும் இணைக்கும்படி ஒரு மண்டபம் அமைந்துள்ளது.
இறைவன் கருவறை வாயிலில் விநாயகரும் பாலமுருகனும் மாடங்களில் உள்ளனர். முகப்பு மண்டபத்தில் சிறு மண்டபமாக நந்திக்கு அமைக்கப்பட்டு உள்ளது. கருவறை சுற்றி கோஷ்ட அமைப்புக்கள் ஏதுமில்லை. கருவறையை சுற்றி வரும்போது நான்கு லிங்க மூர்த்திகள் தனித்து வெளியில் இருத்தப்பட்டு உள்ளன. இவர்களுக்கு ஒரு மேடை அமைத்து கூரை ஒன்று வேயப்படவேண்டும். தனித்து சண்டேசர் தனி சிற்றாலயத்தில் உள்ளார். ஒரு காலத்திற்கான பூசைகள் நடைபெறுகின்றன. பெரும் செலவு செய்து கோயில் உருவாக்குபவர்கள் இந்த இறைவன் இறைவியின் பெயரை எழுதிவைத்தால் வெளியூர் அன்பர்கள் அறிந்து கொள்ள உதவும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ராதாநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி