Wednesday Dec 18, 2024

யானை முகம் இன்றி மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் கோயில் சிறப்புகள்!

திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே சிதிலபதியில் உள்ளது முக்தீஸ்வரர் ஆலையம்.

மனித முக விநாயகர்:

இந்த கோயிலில் அருள்பாலிக்கும் விநாயக பெருமான் மனிதம் உகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார்.

இத்தலத்தில் ஓடும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. இது போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாயும் நதி, ஆறுகள் அருகே அமைந்துள்ள கோயிகள் பரிகாரத்துக்கும் வழிபாட்டுக்கும் மிகச் சிறந்தவை.

சத்குரு வேங்கடராம சுவாமிகள் கூறியதாவது:

திலதைப்பதி ஆலயத்தின் முன் பிள்ளையாரப்பர் மனிதமுகத்துடன், நரமுக விநாயகராக, ஆதிவிநாயகராக மிகவும் அபூர்வமான தோற்றத்துடன் அருள்கின்றார். வேறெங்கும் இத்தகைய திவ்ய ஸ்ரூபத்தைக் காண இயலாது. ஸ்ரீ அகஸ்தியர் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் தூல, சூக்கும வடிவுகளில் நேரடியாகவே வழிபடும் பிள்லையார் மூர்த்தி இவர்.

குடும்பத்தில் பெற்றோர்கள், பிள்ளைகள், புதல்விகள், பேரன், பேத்திகள் இடையே சுமூகமான, சாந்தமான உறவு நிலை ஏற்பட்டிட வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த விநாடக மூர்த்தி. குழந்தைகளுக்கு , பள்ளி பருவத்தினருக்கு நல்ல ஞாபக சக்தியை அளிக்க வல்ல மூர்த்தி.

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top