மேல்மங்கை நல்லூர் சிவன் கோயில், மயிலாடுதுறை
முகவரி
மேல்மங்கை நல்லூர் சிவன் கோயில் மேல்மங்கை நல்லூர், குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 404
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் எட்டாவது கிமீ-ல் உள்ளது மங்கை நல்லூர் கூட்டு ரோடு இங்கிருந்து மேற்கில் ஒரு கிமி சென்றால் மேல்மங்கை நல்லூர் கீழ் மங்கை நல்லூர் என் இரு ஊர்கள் உள்ளன, இந்த ஊர்கள் வீரசோழன் ஆற்றின் கரையில் உள்ளன. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தபோது இவ்வூரில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோயில் ஒன்று இருந்துள்ளது. அக்கோயிலில் முதலாம் ராஜேந்திரன் காலத்தியது அவரது கல்வெட்டுக்களும் அவரது பின் வந்த அரசர்களது கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. இக்கோயில் சிதிலமடைந்து அழிந்து விட்ட போதிலும் அதில் கிடைந்த கற்களை கொண்டு புதிய கோயில் அமைத்துள்ளனர். அதனால் சில கல்வெட்டுக்கள் தலைகீழாக இருப்பதை யும் காணமுடியும். கிழக்கு நோக்கிய கோயில் இறைவன் கிழக்கும், இறைவி தெற்கும் நோக்கியுள்ளனர். பிரகாரத்தில் விநாயகர் முருகன் உள்ளனர். கருவறைகோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை உள்ளனர்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேல்மங்கை நல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி