மேலையூர் ஸ்ரீ நாகாபரணீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு
முகவரி
மேலையூர் ஸ்ரீ நாகாபரணீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), மேலையூர், செய்யூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்- 603 108.
இறைவன்
இறைவன் : ஸ்ரீ நாகாபரணீஸ்வரர் இறைவி: ஸ்ரீ பெரியநாயகி
அறிமுகம்
செங்கல்பட்டு திருப்போரூர் சாலையில் வேங்கூர் வந்து மேற்கு திசையில் சுமார் 4 கி.மி. சென்றால் மேலையூர் கிராமம். பூமியில் கண்டடுக்கப்பட்ட பல இறைவடிவங்கள் இன்று புதிதாக அமைக்கப்பட்ட கோயிலில் காட்சி கொடுக்கின்றன. சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் ஸ்ரீ நாகாபரணீஸ்வரர் என்ற திருநாமத்தோடு காட்சி அளிக்கிறார். அம்பாள் திருநாமம் ஸ்ரீ பெரியநாயகி. ஸ்வாமி கருவறை அருகிலேயே ஸ்ரீ விசாலாக்ஷி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் சன்னதி உள்ளது. மற்ற சன்னதிகள் விநாயகர், சுப்பிரமணியர், ஐயப்பன், லட்சுமி, சித்திரகுப்தர், ப்ரம்மா சரஸ்வதி, அகஸ்தியர், லலிதாம்பிகை, திரிபுரசுந்தரி,பைரவர் தாத்தாத்ரேயர் சரபேஸ்வரர் ஆகியன. திருக்குளம் கோயில் பின்புறம் காணப்படுகிறது. ராஜ கோபுரம், கொடிமரம், வசந்த மண்டபம் உள்ளடக்கிய இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயில் வளாகத்திலேயே ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கொண்டுள்ளார். கருடன், ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ணர், ஆஞ்சநேயர் சன்னதிகள் இருக்கின்றன. தொடர்புக்கு திரு வாசுதேவன்- 94980
நம்பிக்கைகள்
இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. குழந்தை பேறு, தீராத நோய் விலக,திருமண தடை விலக இங்கு உறையும் ஈசன் அருள்புரிகிறார்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை