மேலப்பூதனூர் அக்னீஸ்வரர் சிவன் கோயில், நாகப்பட்டினம்
முகவரி
மேலப்பூதனூர் அக்னீஸ்வரர் சிவன் கோயில், மேலப்பூதனூர், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101.
இறைவன்
இறைவன்: அக்னீஸ்வரர் இறைவி: கருந்தார்க்குழலி
அறிமுகம்
பூதனூர் தற்போது மேலபூதனூர், கீழபூதனூர் என உள்ளது, இரு ஊர்களிலும் சிவாலயங்கள் உள்ளன. திருவாரூர் – நாகூர் சாலையில் உள்ள சோழங்கநல்லூரில் இருந்து வடக்கில் நான்கு கிமி தூரம் சென்றால் இவ்வூரை அடையலாம். திருச்செங்காட்டாங்குடியில் இருந்து தெற்கில் 2 கிமீ. தூரத்தில் சென்றடையலாம். அக்னி பகவான் வழிபட்டு பாபவிமோசனம் பெற்ற தலம் தான். திருப்புகலூர் திருத்தலம். இந்தக் கோயிலில் அருளும் இறைவன் அக்னீஸ்வரர்; இறைவி கருந்தார்க்குழலி. சூளிகாம்பாள் அதே போல் இத்தலமும் அக்னி வழிபட்ட தலம், இங்கும் இறைவன் பெயர் அக்னீஸ்வரர் இறைவி கருந்தார்க்குழலி எனும் சூளிகாம்பாள். கோயில் சிறிய கோயில் தான். இறைவன் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார். இறைவி தெற்கு நோக்கி உள்ளார். இறைவன் முன்னர் ஒரு அழகிய நந்தி உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன் துர்க்கை உள்ளனர். பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் சுப்பிரமணியர் ஆகியோருக்கு உள்ளன. நவக்கிரக மண்டபம் வடகிழக்கில் உள்ளது. அருகில் ஒரு கிணறும் உள்ளது. விநாயகரின் பின்புறம் மதில் சுவற்றை ஒட்டி இரு லிங்கங்கள் சமீப காலத்தில் நிலைநிறுத்தப்பெற்றுள்ளன. மோகன லிங்கம், பார்வதி லிங்கம் என பெயரிடப்பட்டுள்ளன. காலை, மாலை பூஜைகள் நடைபெறுகின்றன. அனைத்து மூர்த்தங்களும் சுத்தமாக இருப்பதை காண மகிழ்ச்சியாக உள்ளது.
புராண முக்கியத்துவம்
க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல் நாட்டு பூதனூர் என கல்வெட்டுக்கள் சொல்லும் பூதனூர் சோழர்காலத்தில் நிலக்கொடையாக கொடுக்கப்பட்ட ஊராகும். திருவாரூர் அருகில் பூதமங்கலத்தான் என்னும் வறியவன் ஒருவன் வாழ்ந்து வந்தான், . அவன் மகன் கருணாகரன். பூதமங்கலத்தான் இறந்த பின் சிறுவன் கருணாகரன் செல்வனாவான் என்பதைத் தன் மந்திர சக்தியால் அறிந்த ஒருவன் வந்து கருணாகரனிடம் ஒரு லட்சம் பொன் கேட்டான். கருணாகரன் நகைத்து ஒரு காசுகூட இல்லாத என்னிடம் ஒரு லட்சம் பொன் கேட்கிறாயே என்றான். பின் கருணாகரனுக்காகச் செல்வத்தைக் காத்து நிற்கும் பூதத்தை பற்றி சொல்லி பின் பூதத்தை வேண்டி கடாரங்கொண்டானிலிருந்து பொற்குவியல் பெற்றுக் கருணாகரன் செல்வன் ஆனான். பெரும் செல்வத்தை திருவாரூர்ச் சிவாலயத்திற்கு அளித்தான். இதை பற்றிய பாடல் ஒன்றும் உள்ளது. இந்த வறியவன் வாழ்ந்த ஊரே பூதனூர் எனப்படுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலப்பூதனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி