Sunday Nov 24, 2024

மேலக்கொட்டையூர் ஸ்ரீ மேகநாதீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்

முகவரி

மேலக்கொட்டையூர் ஸ்ரீ மேகநாதீஸ்வரர் மத்தளேஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, மேலக்கொட்டையூர், காஞ்சிபுரம் மாவட்டம்- 600048.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ மேகநாதீஸ்வரர் இறைவி : ஸ்ரீ மேகாம்பிகை

அறிமுகம்

ஸ்ரீ மேகாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாதீஸ்வரர் திருக்கோயில், வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் மேலக்கொட்டையூர் கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 1400 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோயில் சீரமைக்கப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கோஷ்ட மூர்த்தங்கள், கன்னிமூலை கணபதி, வள்ளி தேவசேனா முருகன், சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகம் சன்னதிகள் உள்ளடக்கிய ஆலயம். ஆலய முகப்பில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம். மூலவர் ஸ்ரீ மேகநாதீஸ்வரர் சதுர பீடத்தில் மேற்கு திசை நோக்கி தரிசனம் தருகிறார். சீரமைப்பு பணியின்போது ஸ்வாமியை வெளியே எடுக்க முடியவில்லை. மகாப்ரதோஷம் சமயத்தில் சிவலிங்கம் வலதுபுறமோ , இடதுபுறமோ சற்று சாய்ந்து காணப்படுவதை இன்றும் காணலாம். ஸ்ரீ துர்வாச முனிவர் சாபம் பெற்ற வருணதேவன் இங்கு தீர்த்தம் அமைத்து ஈசனை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்ததாக தல புராணம் கூறுகிறது. இங்குள்ள தீர்த்தம் வருண தீர்த்தம். தொடர்புக்கு திரு சிவா குருக்கள்-9962267286, திரு பக்தவச்சலம்- 9941416205, திரு மகேந்திரன்-7358491381.

நம்பிக்கைகள்

பரிகாரம் தலம் : திருமணத்தடை, குழந்தைப்பேறு, உடல் ஆரோக்கியம், பதவி உயர்வு, கடன்தொல்லை தீர இங்குள்ள ஈசனை வழிபட்டு பலன் அடைகின்றனர் மக்கள். அதிக மக்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபடுகின்றனர். ஒவ்வொரு பிரதோஷம் அன்று 108 சங்காபிஷேகம் இங்கு விமரிசையாக நடைபெறுகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேலக்கொட்டையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வண்டலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top