மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயில், சென்னை

முகவரி :
அருள்மிகு கோதண்டராமர் கோயில்
1, வெள்ளை தோட்டம், மேற்கு மாம்பலம்,
சென்னை மாவட்டம் – 600033.
தொலைபேசி: 044 2370 0243
இறைவன்:
பட்டாபிராமர்
இறைவி:
சீதா
அறிமுகம்:
கோதண்டராமர் கோயில், சென்னையில் மேற்கு மாம்பலம் அருகே அமைந்துள்ள கோயிலாகும். இராமருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவின் கடவுளர் “பட்டாபிராமர்” என்று அழைக்கப்படுகின்றார். பட்டாபிராமன் துணைவியாக சீதா பிராட்டி உள்ளார். கோயிலின் வளாகத்தில் ஒரு பெரிய தெப்பமும் கட்டப்பட்டுள்ளது. இது மாம்பலம் தொடருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. இக்கோயில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சித்தரை மாத பிரமோத்சவமும் இங்கு பிரசிதிப்பெற்றது.
புராண முக்கியத்துவம் :
பிரதான வாயிலில் நுழைந்தால் அங்கு ஸ்ரீ ஹனுமான் சன்னதி இருக்கிறது. முக்கிய சன்னதியின் இடது புறத்தில் ரங்கநாயகி தாயார் சன்னதி உள்ளது. தாயாரை வேண்டிக்கொண்டு உள்ளே நுழைந்தால், ஸீதம்மா, லக்ஷ்மண், ஆஞ்சநேயர் ஸமேத ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலத்தில் காக்ஷி அருளுகிறார். பத்ராசலம் கோயிலுக்கு அடுத்தபடியாக இங்குதான் பட்டாபிஷேக ராமர் இருக்கிறார். வில்லேந்திய கோதண்டராமர், ஸீதா, லக்ஷ்மண் ஆகியோரின் சிலைகள் 1920-ல்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டன; இந்த சிலைகள் பட்டாபிஷேக ராம்ரின் பின்னால் உள்ளன. கோயிலில் ஸ்ரீரங்கநாதர், யோக நரசிம்ஹர், ஆழ்வார்கள், ஆண்டாள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. ஒரு சிறிய நந்தவனமும் இருக்கிறது. கோயிலின் திருக்குளம் புகழ் பெற்றது. வருஷம் தோறும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
அருகிலுள்ள விமான நிலையம்: சென்னை
அருகிலுள்ள இரயில் நிலையம்: மாம்பலம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்:
காலம்
ஆண்டுகள் பழமையானது ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தி.நகர்