மேட்டுமருதூர் ஆராவமுதேஸ்வரர் கோயில், கரூர்
முகவரி :
மேட்டுமருதூர் ஆராவமுதேஸ்வரர் கோயில்,
மேட்டுமருதூர்,
கரூர் மாவட்டம் – 639107.
இறைவன்:
ஆராவமுதேஸ்வரர்
அறிமுகம்:
கரூர் மாவட்டம் குளித்தலைக்கு தென்கிழக்கே 8.5 கி.மீ தொலைவில் மேட்டுமருதூர் எனும் இவ்வூர் அமைந்துள்ளது. ஊரின் வடகிழக்கு மூலையில் வயல்வெளியின் அருகே இக்கோவில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்து அமையப்பெற்ற இக்கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டு விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் பல்லவர்கள் காலத்தில் இருந்து வழிபாட்டில் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல்லவர்கள் காலத்திற்குப் பின் சோழர்களால் பராமரிக்கப்பட்டுள்ளது.
கோவில் கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம் என்ற மூன்று பிரிவுகளாக உள்ளது. ஆறரை அடி சுற்றளவுடன் எட்டு அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிவலிங்கம் கருவறை அளவிற்கு பெரிய அளவில் உள்ளது. இந்தப்பகுதியில் இதுவே மிகப்பெரிய சிவலிங்கம். பல்லவர்காலத்திய ஜேஸ்டா தேவி எனப்படும் தவ்வை சிற்பத்தில் மாந்தன் , மாந்தியுடன் உள்ளதை தாண முடியும். பிரம்மாவின் சிற்பத்தையும் , சண்டிகேஸ்வரரின் சிற்பங்களையும் விநாயகர் சிற்பத்தையும் காணலாம்.
பழங்கால நந்தியம்பெருமான் சிவனைப்பார்த்தவாறு கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தை நான்கு விஷ்ணு காந்த அரைத்தூண்களில் கலசம், தாடி, கும்பம், பாளி பலகை போன்ற பகுதிகளுடன் நிற்கிறது. நான்கு தூண்களில் மூன்று மட்டுமே கோவிலின் உள்ளேயுள்ளது. நான்காவது தூண் சேதப்பட்ட நிலையில் கோவிலின் வெளியே வடபுறத்தில் கீழே கிடக்கிறது.
வெகு விமர்சகையாக தேர் இழுத்து திருவிழா நடந்ததாக சொல்லப்படும் இக்கோவிலில் சுற்றிவருவதற்குக் கூட 4 அடி பாதைகள் இல்லாத நிலையில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சுற்றுச்சுவர்களோ, வேலிகளோ இல்லாத நிலையில் தான் இக்கோவில் உள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட விமானத்தின் பகுதியானது காலப்போக்கில் தொடர்ச்சியான பராமரிப்பின்றி மழையின் பாதிப்பால் அரிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
இராஜராஜசோழன் கல்வெட்டின் வாயிலாக சோழர் காலத்தில் இவ்வூர் மீய்கோட்டு நாட்டு மதான மருதூர் என்றழைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள இறைவன் “நாகபன்னேஸ்வரத்து மஹாதேவர் மற்றும் ஆரவமிதீஸ்வரர் என்றழைக்கப்பட்டிருக்கிறார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேட்டுமருதூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி