மூவலூர் காவிரிக்கரை காசிவிஸ்வநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை
முகவரி
மூவலூர் காவிரிக்கரை காசிவிஸ்வநாதர் திருக்கோயில், மூவலூர், மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609806
இறைவன்
இறைவன்: காசிவிஸ்வநாதர்
அறிமுகம்
மயிலாடுதுறை – கும்பகோணம் பிரதான நெடுஞ்சாலையில் மூவலூர் மார்கசகாயர் கோயில் இருக்கிறதல்லவா அந்த கோயிலின் வடக்கில் காவிரியாற்றுக்கு செல்லும் தெரு ஒன்றுள்ளது அதில் சென்றால் காவிரி கதவணை உள்ளது அதனை ஒட்டி உள்ளது ஒரு கருங்கல் மண்டபம் இது தான் மூவலூர் சுவாமி காவிரியில் தீர்த்தவாரி கொடுக்குமிடம் . இதனை ஒட்டியே கிழக்கு நோக்கிய விஸ்வநாதர் கோயில் உள்ளது. அருகில் பெரிய அரசமரத்தின் கீழ் சில நாகர்கள் உள்ளன. இறைவன் கிழக்கு நோக்கியும் உள்ளார். அருகில் விநாயகர் சன்னதி ஒன்றும் கிழக்கு நோக்கி உள்ளது. இக்கோயிலின் பின்புறம் துர்க்கை கோயில் உள்ளது. அதனருகில் கருமாதிமண்டபம் ஒன்றும் உள்ளது. ஊரின் ஒதுக்கு புறமாக உள்ளதாலும், சாராயக்கடை ஒன்று அருகில் இருப்பதாலும் யாரும் இப்பகுதிக்கு பகலில் கூட செல்வதில்லையாம், எங்கு பார்த்தாலும் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்பளர்கள் குப்பை கூளங்கள், அப்போ கோயில் திறப்பு? பூஜை?? # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மூவலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி