முரோ தாகூஸ் கோவில், இந்தோனேசியா
முகவரி
முரோ தாகூஸ் கோவில், XIII கோட்டோ கம்பார், கம்பர் ரீஜென்சி, ரியாவ் – 28453, இந்தோனேசியா
இறைவன்
இறைவன்: புத்தர்
அறிமுகம்
முரா தாகூஸ் கோயில் என்பது ஒரு புத்த கோயில் வளாகமாகும், இது ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்திற்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது. இது இந்தோனேசியாவின் சுமத்ராவின் ரியாவ் மாகாணத்தில் கம்பர் ரீஜென்சியில் அமைந்துள்ளது. அதன் எஞ்சியிருக்கும் கோயில்கள் மற்றும் பிற தொல்பொருள் எச்சங்கள் கி.பி பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இது சுமத்ராவில் உள்ள மிகப்பெரிய மற்றும் சிறந்த பாதுகாக்கப்பட்ட பழங்கால கோயில் வளாகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. முரா டாகஸ் கோயில் வளாகம் 1 மீட்டர் உயர கல் சுற்றளவு சுவரால் சூழப்பட்டு காணப்படுகிறது. இது 74 x 74 மீட்டர் அளவினைக் கொண்டு அமைந்துள்ளது. வெளிப்புற சுவர் வடக்கு பக்கத்தில் ஒரு நுழைவாயில் மூலம் ஊடுருவி செல்லும் வகையில் உள்ளது. சுவர்களுக்குள் நான்கு புத்தர் கோயில்களின் (கண்டி) எச்சங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் அசாதாரணமான நிலையில் உள்ளது மஹ்லிகாய் கோயில் ஆகும்.. இந்த தாமரை வடிவ பௌத்த ஸ்தூபம் இந்தோனேசியாவில் தனித்துவமான தன்மையினைக் கொண்டதாகும். இந்த அமைப்பு ஒரு எண்கோண அடித்தளத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் உயரம் 14.30 மீட்டர் ஆகும். ஸ்தூபியின் மேல் நிலை சிங்கம் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, அவற்றை கீழே இருந்து தெளிவாகக் காண முடியவில்லை.
புராண முக்கியத்துவம்
முரா டாகஸ் கோயிலானது பதினொன்றாம் நூற்றாண்டில் கடல் சார்ந்த ஸ்ரீவிஜய பேரரசால் கட்டப்பட்ட கோயிலாகும். கோயில்களின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பினை நோக்கும்போது அவை மகாயான பௌத்தத்தைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் முரா டாகஸ் கோயில் பெரிய புனரமைப்புக்கு உட்பட்டிருக்கலாம் என்று ஷ்னிட்கர் கருதுகிறார். இந்தப் பகுதியானது ஸ்ரீவிஜயாவால் ஒரு மதம் சார்ந்த மையமாவும், வர்த்தகம் சார்ந்த மையமாகவும் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த தளம் பல நூற்றாண்டுகளாக கைவிடப்பட்டு எவரும் காணாத வகையில் இருந்தது. இதனை 1860 ஆம் ஆண்டில் கார்னெட் டி க்ரூட் என்பவர் கண்டுபிடித்து வெளிவுலகிற்குத் தெரியப்படுத்தினார். டபள்யூ.பி. க்ரோன்வெல்ட் என்பவர் இந்த இடத்தில் 1880 ஆம் ஆண்டில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அப்பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வந்தன. முரா டாகஸ் தொல்பொருள் தளம் குறித்த ஆய்வானது 1983 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது, இதன் விளைவாக பண்டைய கட்டட எச்சங்கள், மஹ்லிகாய் கோயில் வளாகம் மற்றும் பிற பழங்கால கட்டட அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த தளம் தற்போது ஒரு தேசிய நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
காலம்
11 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கம்பார்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சுமத்ரா நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
ரியாவ்