முரோ ஜம்பி புத்த கோவில், இந்தோனேசியா
முகவரி
முரோ ஜம்பி புத்த கோவில் தேச முரா ஜம்பி, முரோ செபோ, கபுபதேன் முரோ ஜம்பி, ஜம்பி – 36382, இந்தோனேசியா
இறைவன்
இறைவன்: புத்தர்
அறிமுகம்
முரோ ஜம்பி கோயில் வளாகம் இந்தோனேசியாவின் சுமத்ராவின் ஜம்பி மாகாணத்தின் முரோ ஜாம்பி ரீஜென்சியில் உள்ள ஒரு புத்த கோயில் வளாகமாகும். இது ஜம்பி நகரிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகம் மேலாயு இராஜ்ஜியத்தால் கட்டப்பட்டது. அதன் எஞ்சியிருக்கும் கோயில்கள் மற்றும் பிற தொல்பொருள் எச்சங்கள் பொ.ச. 7 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவையாக கருதப்படுகின்றன. இந்தத் தொல்பொருள் தளத்தில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட எட்டு கோயில்கள் உள்ளன. அவை சுமார் 12 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன. படாங் ஹரி ஆற்றின் குறுக்கே 7.5 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. 80 கோயில் இடிபாடுகள் இன்னும் மீட்டெக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. இது தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் சிறந்த பாதுகாக்கப்பட்ட பண்டைய கோயில் வளாகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஸ்ரீவிஜய இராஜ்ஜியத் தோற்றத்தின் ஆரம்ப இடமாக முரோ ஜாம்பி கோயில் வளாகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்கு முக்கியமாக காரணம், முரோ ஜம்பியில்தான் அதிக எண்ணிக்கையிலான கோயில்கள் காணப்படுகின்றன. மாறாக தெற்கு சுமத்ராவில் உள்ள மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான தொல்லியல் தளங்களே உள்ளன.
புராண முக்கியத்துவம்
இந்தியாவின் சோழ இராஜ்ஜியம் ஸ்ரீவிஜயாவின் சுமத்திரா கடல் சாம்ராஜ்யத்தின் தலைநகரைத் தாக்கி அழித்தபோது மெலாயு இராஜ்ஜியத்தின் எழுச்சி ஆரம்பமானது எனலாம். அந்த எழுச்சி ஆரம்பமான காலம் 1025 ஆம் ஆண்டு ஆகும். இது பல சிறிய சுமத்திரன் அரசியல் கூறுகளை தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்த அனுமதித்தது. பன்னிரண்டாம் மற்றும் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில், படாங் ஹரி நதி மற்றும் அதன் கழிமுகங்களுடன் மெலாயு சுமத்ராவில் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார சக்தியாக மாற ஆரம்பித்தது. முரோ ஜம்பியில் உள்ள கணிசமான தொல்பொருள் எச்சங்களைக் கொண்டு இது மெலாயு தலைநகரின் தளமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 1278 ஆம் ஆண்டில் ஜாவாவின் சிங்காசரி இராஜ்ஜியம் நகரத்தைத் தாக்கியபோது, நகரத்தின் பெருமை முடிவிற்கு வந்தது. அரச குடும்ப உறுப்பினர்கள் பிடிக்கப்பட்டனர்.இந்த தளம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் டச்சு ஆய்வாளர்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்போது ஒரு தேசிய நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
காலம்
பொ.ச. 7 முதல் 13 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முரோ ஜம்பி
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஜாவா
அருகிலுள்ள விமான நிலையம்
ஜம்பி