முப்பைத்தங்குடி கைலாசநாதர் சிவன்கோயில், காரைக்கால்
முகவரி :
முப்பைத்தங்குடி கைலாசநாதர் சிவன்கோயில்,
முப்பைத்தங்குடி, திருநள்ளாறு கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம்.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
காமாட்சி
அறிமுகம்:
திருநள்ளாறு – செல்லூர் வந்து அங்குள்ள பெருமாள் கோயில் வழி தெற்கில் செல்லும் சாலையில் 2 கிமீ தூரம் சென்றால் முப்பைத்தங்குடி உள்ளது. முப்புரமெரித்தான்குடி என அழைக்கப்பட்டு பின்னர் முப்பைத்தங்குடி ஆனதாக ஒரு தகவல். இதுவும் உண்மையாக இருத்தல் கூடும். இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன. நகரின் வாகன இரைச்சல்கள் இல்லா சிறிய கிராமம். ஊரின்மத்தியில் அழகிய பெரிய நீர் நிலையில் கரையில் ஒரு அரசமரம் அதனடியில் ஒரு சிறிய விநாயகர் எதிரில் பெரிய சிவாலயம் கிழக்கு நோக்கியதாக உள்ளது, வாயில் கிழக்கில் மட்டுமே உள்ளதால் மேற்கில் உள்ள தெருவில் இருந்து சிறிய பக்கவழிமூலம் கோயிலை அடையவேண்டும், சமீபத்தில் தான் குடமுழுக்கு கண்டுள்ளது என்பதால் பார்க்க பளீரென்று காட்சியளிக்கிறது.
இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், இறைவி காமாட்சி தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். நந்தி தனி மண்டபத்தில் வெளியில் உள்ளார். கைலாசநாதர் எனும் பெயர் கொண்டிருப்பதால் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தலமாக இருத்தல் கூடும். கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன், லிங்கோத்பவர், துர்க்கை உள்ளனர். பிரகார சிற்றாலயங்களில் விநாயகர் மற்றும் முருகன் மற்றும் வடமேற்கில் ஒரு சிற்றாலயத்தில் லட்சுமிநாராயணர் உள்ளார். வடகிழக்கில் நவகிரக மண்டபம் உள்ளது, மேற்கு நோக்கிய சிற்றாலயத்தில் பைரவர் உள்ளார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முப்பைத்தங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி