Wednesday Dec 25, 2024

முத்தையாபுரம் ஸ்பிக் நகர் விநாயகர் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி :

முத்தையாபுரம் ஸ்பிக் நகர் விநாயகர் திருக்கோயில்,

ஸ்பிக் நகர், முத்தையாபுரம்

தூத்துக்குடி மாவட்டம் – 628005.

இறைவன்:

விநாயகர்

அறிமுகம்:

தூத்துக்குடியின் பழம்பெயர் திருமந்திர நகர் என்பதாகும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைக்கின்றார். முருகப்பெருமானின் திருமணத்தைக் கண்டுகளிக்க வந்த சிவபெருமானும், பார்வதிதேவியும் சோலை சூழ்ந்த இவ்வூருக்கு எழுந்தருளி தங்குகின்றனர். அச்சமயம் அம்பிகை சிவபெருமானிடம் வேதமந்திரத்தை உபதேசிக்குமாறு வேண்டுகிறார். இறைவனிடம் அம்பிகை உபதேசம் பெற்ற திருத்தலமாதலின் இவ்வூர் திருமந்திர நகர் என அழைக்கப்பட்டது.

இன்றைய தூத்துக்குடி சோலையாக இல்லை, எனினும் இவ்வூருக்கு மூன்று கிமீ தெற்கில் உள்ள SPIC Nagar அழகிய சோலை வனமாக உள்ளது. தனது ஊழியர் குடியிருப்பை அழகான சோலைவனமாக பராமரிக்கின்றனர். சூரிய ஒளி இறங்க விடாத அடர்ந்த மரங்களும், மயிலின் அகவலும், குயிலின் குரலையும் தவிர வேறு எதுவும் கேட்காத அமைதியும், கொண்ட திருமந்திர பிரதேசம் என கூறலாம்.

பெரிய வளாகத்தில் மத்தியில் கிழக்கு நோக்கிய ஒரு பெரிய கருவறையில் ஆளுயர அழகுபிள்ளையார்; முகப்பில் இருபதடி உயர மண்டபம், சுற்றிவர சுற்றாலை மண்டபம்.  கோயிலின் பின்புறம் பெரிய அரசமரம் அதனை ஒட்டி கிழக்கு நோக்கிய சிறிய பெருமாள் ஆலயம். அருகில் மேற்கு நோக்கிய ஆஞ்சநேயர் சிற்றாலயம். விநாயகர் கோயிலின் பின்புறம் நாகராஜாவும் அவரது ராணியும் உள்ளனர். ஒரு சன்னதியில் உள்ளனர். அதனை ஒட்டி கிழக்கு நோக்கிய காசி விஸ்வநாதரும், விசாலாட்சியும் அருகருகே வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். அடுத்த சிற்றாலயத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சன்னதி, தென்புறம் நோக்கிய ஒரு சபையில் ஆனந்த நடராஜர் சிவகாமியுடன், உள்ளனர். கோயில் வளாகம் அப்படி ஒரு சுத்தம், துடைத்து வைத்தாற்போல இருக்கிறது. சுற்றிலும் மணல் கொட்டிவைத்த திறந்த வெளி மெல்லிய காற்றில் பூக்களின் வாசம். தூத்துக்குடியின் சொர்க்கம் இக்கோயில் என்பதில் ஐயமில்லை.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

முத்தையாபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தூத்துக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top