முக்காணி இராமபரமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி
முகவரி
முக்காணி ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மை சமேத ஸ்ரீ இராமபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்செந்தூர் – முக்காணி ஆற்றுப்பாலம், முக்காணி, தூத்துக்குடி மாவட்டம்
இறைவன்
இறைவன்: ஸ்ரீ இராமபரமேஸ்வரர் இறைவி: ஸ்ரீ பர்வதவர்த்தினி
அறிமுகம்
தூத்துக்குடி மாவட்டம்,தூத்துக்குடி- திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள முக்காணி ஆற்றுப்பாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மை சமேத ஸ்ரீ இராமபரமேஸ்வரர் திருக்கோவிலில் தினசரி விடியற்காலை சூரியன் உதயமாகும் நேரத்தில் மூலஸ்தானத்தில் உள்ள சிவன் மீது சூரிய ஒளி நேராக விழுகிறது. இதன் மூலமாக சூரிய ஒளியில் ஸ்ரீ ராமபரமேஸ்வரர் பொன்நிறத்தில் காட்சி அளிக்கிறார். இதனை விட சிறப்பான நிகழ்ச்சியாக இந்த சூரியஒளி சிவன் மீது விழும் நேரத்தில் மூலஸ்தான சிவ லிங்க ரூபமான ஸ்ரீ ராமபரமேஸ்வரர் சிலையின் பாணத்திலிருந்து வேர்வை வெளிவருகிறது.இது போன்ற அற்புத நிகழ்வு வேறு எங்கும் நடைபெறுவதில்லை. இத்திருக்கோயிலில் 2006ஆம் ஆண்டு வைகாசி மாதம் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
புராண முக்கியத்துவம்
இத்திருக்கோவில் தென் இராமேஸ்வரமாக விளங்குகிறது. அம்பாள் தெற்கு நோக்கி பார்த்தபடி இருக்கிறாள் இதனால் தெற்கில் இருந்து வரும் தீயாசக்திகளையும், தீமையையும் தடுத்து காக்கும் அம்பிகையாக விற்றுஇருக்கிறாள். இங்கு சிவனும் அம்பாளும் சேர்ந்த சன்னதியாக இல்லாமல் தனி சன்னதி கொண்டுள்ள திருத்தலம். இத்திருத்தலத்தில் விநாயகர், பாலசுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் அமைத்திருக்கிறார்கள். இங்கு பைரவர் சன்னதியும் நவகிரக சன்னதியும் கிடையாது. ஏனென்றால் சிவனே இங்கு நவகிரமூர்த்திகளாக விளங்குகின்றார். நம்மிடம் உள்ள கிரகதோஷங்களை நிவர்த்தி செய்யும் சிவனாக இருக்கிறார்.
நம்பிக்கைகள்
நவகிரகமும் வழிபட்டு வரம் வாங்கிய தலம். இதனால் கிரகதோஷம், ஜாகத்தில் தோஷம்,திருமண தடை,கிரக கோளாறுகள் அனைத்தும் நீக்கும் தொய்வமாக இருக்கிறார். இங்கு வந்து நம்பிக்கையுடன் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது அவர்கள் கேட்ட நாட்களூக்குள் அருளும் சிவனாக இருக்கிறார் .இங்கு வந்த ஒரு சிவனடியாருக்கு முக்தி கிடைத்தது அதனால் அவர் மறைமுகமாக வந்து இன்னும் வழிபட்டு செல்வார் என்று ஜோதிட பிரசன்னம் மூலம் கூறப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
இத்திருத்தலத்தில் சிறப்பு என்பது அனைத்து தேவர்கள்,ரிஷிகள்,சித்தர்கள்,வழிபட்ட தலம். இங்கு சிவன் சிலை 15 அடி உள்ளே அதன் கல் ஆழமாக இருக்கிறது. இதில் ஒரே கல்லில் பிரம்மா, விஷ்ணு,சிவனாக வடிவமைக்க பட்டிருக்கிறது. இத்திருத்தலம் எப்பொழுது தோன்றி இருக்கும் என்று சரியாக சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு இது பழைமை வாய்ந்த திருத்தலமாக இருக்கிறது. இந்த சிவனை வழிபட்டால் பிரம்மரையும் விஷ்ணுவையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
திருவிழாக்கள்
இங்கு சிவனுக்கு தினமும் அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறும். இது மட்டும் இல்லாமல் பௌர்ணமி, பிரதோஷம், திருக்கார்த்திகை தீபம், சிவராத்திரி, மார்கழி மாதம் பூஜை, திருவாதிரை என்ற சிறப்பு நாட்களில் சிறப்பு பூஜைகளும் உண்டு.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முக்காணி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தூத்துக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி