முகாசாபரூர் விஸ்வநாதேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
முகாசாபரூர் விஸ்வநாதேஸ்வரர் சிவன்கோயில்,
முகாசாபரூர், விருத்தாசலம் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 606104.
இறைவன்:
விஸ்வநாதேஸ்வரர்
இறைவி:
அன்னபூரணி
அறிமுகம்:
இருநூறாண்டுகளின் முன் கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலம் அடுத்த பரூர்பாளையம் தான் இந்த மாவட்டத்தில் பெரிய ஊர். பரூர் பாளையத்தின் தலைமை இடம்தான் பரூர். முகாசா என்னும் இஸ்லாமிய படையெடுப்பாளனின் வருகை அந்தப் பகுதியினை மாற்றி விட்டது. ஆலயங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அதிலொன்று அன்னபூரணி உடனுறை விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில். சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த இந்தக் கோயில் அமைந்துள்ள. பரூர் பாளையம் இன்று முகாசாபரூர் என்று அழைக்கப்படுகிறது. ஆம்! ஆக்கிரமிப்பாளனின் பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டுவிட்டது.
பழமையான கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது அதனால் அந்த பழமையின் அழகு கெட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும். முகப்பில் பெரிய கருங்கல் நந்தி மண்டபம் அடுத்து பலிபீடம் ஒன்று மட்டும் மழமை மாறாமல் உள்ளன. சிறிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதும்,மிகப்பெரிய நந்தி.பெரியதொரு மண்டபத்தில் உள்ளது. இறைவன் விஸ்வநாதராய் அருள்பாலிக்கிறார். கோரக்க சித்தர் போற்றி வணங்கிய ஈசன் இவர். இவரது அருளோடு இந்த ஆலய பிராகாரத்தில் சித்தியாகியுள்ளார் கோரக்கர். இந்த பரூர் சிவனை பற்றியும், அன்னை அன்னபூரணி குறித்தும் தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார், சித்தர்.
சிவராத்திரியன்று சூரியன் தன் பொன்கிரணங்களால் இந்த ஈசனை வழிபடுகிறான். பிராகார வலம் வரும்போது,, கோட்டத்து விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகியோரின்சிலைகள் உள்ளன. ஆலய வளாகத்தில் தனி மண்டபத்தில் கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. இந்த இடத்தில் தெய்வீக அதிர்வுகளை உணரமுடிகிறது. பௌர்ணமி நாளில் இவர் சமாதி அருகே அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டால் எண்ணியது நடந்தேறும் என்பது பலரது அனுபவ நம்பிக்கை.
அருகில் இருக்கும் குளம் ஒன்று முழு நிலவு போல் வட்டமாக உள்ளது பாருங்கள். சித்தரின் சமாதியை தரிசனம் செய்துவிட்டு பின்புறம் உள்ளது கன்னி மூலைவிநாயகர் சன்னதி அருகில் வள்ளி-தெய்வானை சமேத முருகனும் தனி சன்னதியில் அமர்ந்துள்ளார். இறைவன் அருகிலேயே இடது புறம் கிழக்கு நோக்கியபடி அன்னை அன்னபூரணிக்கு தனி ஆலயம்.. இறைவியின் எதிரே அழகிய நந்தி உள்ளது. சண்டேசர் சன்னதியின் பக்க சுவற்றில் கோரக்கர் சிவனை பூஜை செய்யும் புடைப்பு சிற்பம் உள்ளது. புதிதாய் செய்து வைக்கப்பட்ட பைரவர், சூரிய சந்திரன் சிலைகள் மற்றும் நவகிரகங்களும் உள்ளன.
காலம்
800 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முகாசாபரூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி