மாத்தளை நாலந்த கெடிகே விஷ்ணு கோவில், இலங்கை
முகவரி
மாத்தளை நாலந்த கெடிகே விஷ்ணு கோவில், கெடிகே வீதி, மாத்தளை மாவட்டம், இலங்கை
இறைவன்
இறைவன்: விஷ்ணு
அறிமுகம்
நாலந்த சிலை மண்டபம் அல்லது நாலந்த கெடிகே என்பது இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் A9 நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கே 1.2 கி.மி தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாலந்த கெடிகே 8-10 நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. பல்லவ கட்டிட கலையம்சம் கொண்டது இச்சிலை மண்டபம். இது இலங்கையின் தொல்பொருள் தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது
புராண முக்கியத்துவம்
எட்டுத் தொடக்கம் பத்தாம் நூற்றாண்டு காலப்பகுதியில் இது கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இக்காலப்பகுதியில் இலங்கைத் தீவில் குழப்பம் நிறைந்து காணப்பட்டது. சிங்கள முடியாட்சி சரிவைக் கண்டு கொண்டிருந்த போது, தென் இந்திய தமிழ் அரசர்கள் தங்கள் ஆட்சியை இத்தீவில் நிலை நாட்டிக் கொண்டிருந்தார்கள். கட்டிடங்கள் 65 சமீ உயரம் கொண்டதும் பல்வேறு துணை உறுப்புக்களால் ஆனதுமான தாங்குதள மேடை மேல் அமைந்துள்ளன. சிலை மண்டபம் முக மண்டபம், உள் மண்டபம், கருவறை என மூன்று பகுதிகளால் ஆனது. இலங்கையில் உள்ள முந்திய சிலை மண்டபங்கள் செங்கற்களால் ஆனவை. ஆனால், இக் கட்டிடம் கற்களால் ஆனது. இது, தென்னிந்தியாவில் பல்லவர்கள் அறிமுகப்படுத்திய கல்லால் கட்டிடங்கள் கட்டும் வழமையின் செல்வாக்கால் ஏற்பட்டது எனக் கருதப்படுகிறது. அத்துடன், இச்சிறிய கட்டிடம் பல்லவ கட்டிடக்கலையை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் மாமல்லபுரத்தில் கட்டிய பஞ்சரதங்கள் எனப்படும் கட்டிடங்களில் ஒன்றான கணேச ரதத்தின் விமான அமைப்பைத் தழுவியே நாலந்த சிலை மண்டபத்தின் விமானமும் அமைந்துள்ளது. பல்லவ கட்டிட கலையம்சம் கொண்ட இக்கட்டிடமானது தாந்திரிக் எனப்படும் பௌத்த சிற்ப வடிவமைப்பைக் கொண்டு பௌத்த–இந்து அடையாள சின்னமாகக் காணப்படுகின்றது. அத்துடன், சிற்பக் கூறுகளிலும் இங்கே பௌத்த, இந்து சிற்ப வடிவங்கள் கலந்து காணப்படுகின்றன.
சிறப்பு அம்சங்கள்
இக்கட்டிடம் அமைந்துள்ள இடம் இலங்கையின் மையப் பகுதியென இலங்கை நிலவளவை திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
காலம்
8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாலந்த கெடிகே
அருகிலுள்ள இரயில் நிலையம்
மாத்தளை
அருகிலுள்ள விமான நிலையம்
மாத்தளை