மறவபட்டி பெருமாள் கோயில், மதுரை
முகவரி :
மறவபட்டி பெருமாள் கோயில்,
மறவபட்டி, பாலமேடு ரோடு,
மதுரை மாவட்டம் – 625707.
இறைவன்:
பெருமாள்
இறைவி:
அம்மன்
அறிமுகம்:
மதுரை பாலமேடு ரோடு வலையபட்டி அருகே மறவபட்டி கிராம மலையடிவாரத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கோட்டைச் சுவருடன் கூடிய 700 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயிலை கண்டுபிடித்துள்ளனர். கோட்டைச் சுவருக்குள் அம்மன், பெருமாள் கோயில்கள் உள்ளன. பெருமாள் கோயிலில் கல்ஹாரம், சதுர கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், முன் மண்டபங்கள் உள்ளன. அலுங்கு (எறும்பு தின்னி) என்ற அமைப்புடைய விமானத்தின் கர்ணர் கூடு, சாலை, பஞ்சாரம், தசாவதார சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அர்த்த மண்டப முகப்பில் கஜலட்சுட்மி சிற்பத்தின் இருபுறமும் சங்கு, சக்கரம் இருப்பதால், இது பெருமாள் கோயில் என உறுதியாகிறது.
அம்மன் சன்னதி சதுர கருவறை, அர்த்த, முன், முக மண்டபங்கள் உள்ளன. விமானத்தில் சிற்பங்கள் ஏதும் இல்லை. இரு கோயில்களின் விமானத்தில் ஆலமரம் வளர்ந்ததால் இடிந்த நிலையில் உள்ளன. பிற்காலத்தில் முன்மண்டபத்தை கருங்கல், செங்கல் சுண்ணாம்பு கலவையில் அடுக்கு முறையில் கட்டியுள்ளனர். கோயில்களின் பிரநாளங்கள் (சுவாமிக்கு அபிஷகேம் செய்த நீர் வரும் அமைப்பு) சிங்க முகமாக இருப்பதால் இதைக் கட்டியது மன்னர்கர் என உறுதி செய்யலாம். சன்னதிகளில் மூலவர்கள் இல்லை. வளாகத்தில் சிதைந்த துாண்கள், பலி பீடம், கல் தொட்டி, சதுர கிணறு உள்ளன.
700 ஆண்டுகள் தொன்மையான பாண்டியர் கோயில் என நிரூபிக்கும் விதமாக கருவறை நிலை கால்களில் சிறு நாகபந்தத்துடன் கோஷ்ட சிற்பங்களின்றி, சுவர், துாண்களில் இரட்டை மீன், தும்பிக்கை மூக்கு மீன் சின்னங்கள் உள்ளன. இக்கோயிலில் 4 யானைகள் இருந்ததாகவும், விழாக்களில் பெரிய தேர் சுற்றி வந்ததாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர். இக்கோயில் மதுரையின் மிகப்பெரிய ஆன்மிக தலமாக இருந்துள்ளது. தற்போது இடிந்து சிதைந்துள்ளது.
காலம்
700 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மறவபட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருதுநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை