மருவத்தூர் ஆதிமத்யார்ஜுனேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
மருவத்தூர் ஆதிமத்யார்ஜுனேஸ்வரர் சிவன்கோயில்,
மருவத்தூர், சீர்காழி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609117.
இறைவன்:
ஆதிமத்யார்ஜுனேஸ்வரர்
இறைவி:
அபின்ன பத்மநாயகி
அறிமுகம்:
வைத்தீஸ்வரன்கோயில் வடக்கில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது. அதனால் செல்வது எளிது. அர்ஜுனம்’ என்றால் மருத¬மரம். மருதமரத்தில் ‘சிவபெருமான்’ எழுந்தருளிய தலங்கள் ‘அர்ஜுன தலங்கள்’ என போற்றப்படுகின்றன. இத்தல இறைவன் .-ஆதிமத்யார்ஜுனேஸ்வரர், இறைவி -அபின்ன பத்மநாயகி.
கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் சமீப குடமுழுக்கில் கட்டப்பட்டது என நினைக்கிறேன். நான்கு புறமும் மதில் சுவர்களுடன் கோயில் உருவாகி உள்ளது. கோயில் எதிரில் ஒரு குளம் உள்ளது. நடுவில் கருங்கல் கொண்டு கட்டப்பட்ட இறைவன் கருவறை அதில் அர்த்தமண்டபம் மகாமண்டபம் என உள்ளன. இறைவி கருவறையும் கருங்கல் தான், அவரது அர்த்தமண்டபம் அதில் இணைகிறது. மகாமண்டபத்தின் உள்ளே ஒரு நந்தியும் பலிபீடமும், மண்டபத்தின் வெளியில் ஒரு நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளன.
இறைவன் கருவறையில் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். கருவறை வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். அம்பிகை தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் உள்ளார். எதிரில் சிறிய நந்தியும் உள்ளார். மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மேற்கு நோக்கியும் சட்டநாதர் சிறிய அளவில் தெற்கு நோக்கியும் உள்ளனர். சூரியன் மண்டப வாயிலின் தென்புறம் உள்ளார். இறைவனது கருவறை கோட்டத்தில் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் உள்ளனர். சண்டேசர் வழமையான பாகத்தில் உள்ளார். பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் முருகன் மகாலட்சுமிக்கும் வடகிழக்கில் அங்காரகனுக்கும் சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. கோயில் பிரகாரங்கள் கல்லும் கட்டியுமாக கிடக்கிறது. விசேஷ நாட்களில் மக்கள் வரத்து உள்ளது. மாலை நேரத்தில் மட்டும் கோயில் திறந்திருக்கும். இக்கோயில் தருமபுரம் மடத்திற்கு சொந்தமானதாகும்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மருவத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி