Saturday Dec 28, 2024

மத்திய கைலாசம்- சென்னை

முகவரி

மத்திய கைலாசம் CPWD பணியாளர் குடியிருப்பு, இந்திரா நகர், அடையாறு, சென்னை, தமிழ்நாடு 600020

இறைவன்

இறைவன்: வெங்கட ஆனந்த பிள்ளையார் (விநாயகர்).

அறிமுகம்

மத்திய கைலாசம் (மத்திய கைலாஷ்) எனும் இந்துக் கோவிலானது தென்சென்னையில் அமைந்துள்ளது. இக்கோவில் சர்தார் வல்லபாய் படேல் சாலை, அடையாறு சாலை, இராஜீவ் காந்தி சாலை ஆகிய முச்சாலைகளின் சந்தியில் அமைந்துள்ளது. இது நடுவண் தோல் ஆய்வு நிறுவனம் எதிரிலும் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திற்கு அருகிலும் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

இக்கோவிலின் மூலவர் வெங்கட ஆனந்த பிள்ளையார் (விநாயகர்). கருவறையைச் சுற்றி சிவன், திருமால், உமை, சூரியன் ஆகியோரின் சிறு கோவில்களும் உள்ளன. மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனுமன், பொற்பைரவர், ஒன்பான்கோள் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. பிள்ளையார் சதுர்த்தி நாளில் சூரியனின் கதிர்கள் இப்பிள்ளையாரின் மேல் விழுவது இக்கோவிலின் சிறப்பு. பிள்ளையார் “ஓம்” எனும் மந்திரத்திற்குரியவர் என்பதாலும் இசையின் ஏழு சுரங்களையும் குறிக்கும் வகையில் இங்கு எட்டு மணிகள் நிறுவப்பட்டுள்ளன. (ச, ரி, க, ம, ப, த, நி, ச என்று முடிவதால் எட்டு என்று கொள்ளப்பட்டது.) இக்கோவிலிலுள்ள அத்யானந்த பிரபு எனும் அனுமனும் பிள்ளையாரும் சேர்ந்த கடவுள் உருவம் புகழ் பெற்றது.

திருவிழாக்கள்

இக்கோயிலில் விநாயக சதுர்த்தியும், தனூர் மாதம் அனுமன் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது.

காலம்

500ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அடையாறு

அருகிலுள்ள இரயில் நிலையம்

அடையாறு

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top