மண்டலேஷ்வர் சப்பான் தேவ் மந்திர், மத்தியப் பிரதேசம்
முகவரி :
மண்டலேஷ்வர் சப்பான் தேவ் மந்திர், மத்தியப் பிரதேசம்
மண்டலேஷ்வர்,
மத்தியப் பிரதேசம் 451221
இறைவன்:
மண்டலேஷ்வர்
அறிமுகம்:
மந்தன மிஸ்ராவை கௌரவிக்கும் வகையில் ஜகத்குருவால் நிறுவப்பட்ட சப்பான் தேவ் மந்திர் குப்தேஷ்வர் மகாதேவர் கோயிலில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது. கோயிலின் தெற்குப் பகுதியில் பைரவரும், வடக்கே குரு கோரக்நாதரும், மேற்கில் கார்த்திகேயனும், கிழக்கில் நந்தியும், மையத்தில் மந்தனேசுவரரும் வீற்றிருக்கிறார்கள்.
புராண முக்கியத்துவம் :
16 ஆம் நூற்றாண்டில் இந்த வரலாற்று நகரத்தில் உள்ள பல கோவில்களை ஔரங்கசீப் அழித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அருகில் உள்ள சுமார் 56 கோயில்களின் சிலைகள் மந்தனேஷ்வர் கோயிலின் குவிமாடத்தில் ஒரு திறப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இச்சம்பவத்தால் இக்கோவில் சப்பான் தேவ் என்று அழைக்கப்பட்டது.
இக்கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ள ஐந்து படி கிணறுகளில் உள்ள நீருக்கு நோய் தீர்க்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. தோல் நோய்கள், பக்கவாதம் மற்றும் பிற கடுமையான நோய்களில் இருந்து விடுபட இந்த புனித நீரில் நீராடுவதற்கு மக்கள் தொலைதூர இடங்களிலிருந்து வருகிறார்கள்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மண்டலேஷ்வர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
இந்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
இந்தூர்